ரஷ்ய அதிபர் புடின்:உருக்கமான தகவல்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் ரஷ்யா வீழ்ந்த சமயத்தில் வருமானத்திற்காகத் தான் டாக்ஸி ஓட்டியதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக பவர்புல்லான தலைவர்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். 69 வயதாகும் விளாடிமிர் புதின், இதுவரை 4 முறை முறை அதிபராகவும் ஒரு முறை பிரதமராகவும் உள்ளார்.

இந்நிலையில், சோவியத் யூனிசன் வீழ்ந்த சமயத்தில் வருமானத்திற்காகத் தான் டாக்ஸி ஓட்டியதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆவணப்படம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதிபர் விளாடிமிர் புதின்

என்ன தான் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான ரஷ்யாவின் அதிபராக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் கூட விளாடிமிர் புதின் குறித்து நமக்கு வெகு சில தகவல்கள் மட்டுமே தெரியும். ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த சமயத்தில் அதன் உளவு அமைப்பான கேஜிபி-இல் பணியாற்றியவர். அதன் பிறகு சோவியத் யூனியன் வீழ்ந்த சமயத்தில் கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

டாக்ஸி ஓட்டியுள்ளேன்

இந்நிலையில், சோவியத் யூனியன் ஆட்சி வீழ்ந்த சமயத்தில் வருமானத்திற்காகத் தான் டாக்ஸி ஓட்டியதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆவணப்படம் ஒன்றில் தெரிவித்துள்ளார். RIA-Novosti செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அதிபர் விளாடிமிர் புதின், “சில நேரங்களில் நான் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் பணம் சம்பாதிக்க ஒரு தனியார் நிறுவனத்தில் நான் டாக்ஸி டிரைவராக இருந்தேன்.

சோவியத் யூனியன் வீழ்ச்சி

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது குறித்துப் பேச எனக்கு விருப்பமில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுதான் நடந்தது. அது தான் உண்மை. சோவியத் ஒன்றியத்தின் சரிவு என்பது வரலாற்று ரஷ்யாவின் முடிவை உணர்த்துகிறது. 30 ஆண்டுகளுக்கு ஏற்பட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சி என்பது பெரும்பாலான பொதுமக்களுக்கு மிகப் பெரிய சோகமாகவே இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.

20ஆம் நூற்றாண்டின் அரசியல் பேரழிவு

சோவியத் யூனியனின் வீழ்ச்சி என்பது அங்கு மிக மோசமான பொருளாதார உறுதியற்ற காலகட்டத்தை ஏற்படுத்தியது. கோடிக் கணக்கான மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியது. அதன் பிறகு ரஷ்யா உட்பட சில நாடுகள் உருவாகின. சோவியத் யூனியன் கோட்பாட்டை மிகவும் நம்பியிருந்த புதினுக்கு சோவியத்தின் வீழ்ச்சி மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. முன்பு ஒரு முறை சோவியத் யூனியின் வீழ்ச்சியை 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அரசியல் பேரழிவு என்று புதின் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் விமர்சனம்

உக்ரைன் மீதான படையெடுப்பு மூலம் சோவியத் யூனியனை மீண்டும் புதின் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்கள் அதிகரித்து வந்த நிலையில், புதின் இது போன்ற சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். இருப்பினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்தே வந்துள்ளது. எந்த நாடும் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதலை ரஷ்யா நடத்தும் எனத் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.

Previous Story

தப்லீக் ஜமாஅத்திற்கு சவூதி தடை!

Next Story

ஆம் ஆத்மி: பஞ்சாப்பில் ஆட்சி!