ரஷ்யா விமான லடாய்

நஜீப் பின் கபூர்

அயர்லாந்து நாட்டின் சேலேஸ்டியஸ் நிறுவனம் தாக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானத்தை நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது அதனை மீண்டும் வெளியேற அனுமதித்தது, நடந்த சிக்கல்களுக்கு ரஷ்யாவிடம் இலங்கை அதிகாரிகள்-அரசியல்வாதிகள் மன்னிப்புக் கேட்டதும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் பதவி நீக்கப்பட்டதும் இலங்கை மட்டு மல்லாது உலக அரசியல் அரங்கிலும் கடந்த வாரம்  பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதன் பின்னணியில் மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் கரம் இருக்கின்றது. இதற்குக் காரணம் இலங்கையில் தற்போது மேற்கத்திய விசுவாசியான ரணில் பிரதமராக இருப்பது காரணம் என்று விமர்சனங்கள் இருக்கின்றன.

சரி இப்போது இந்த ரஷ்யா ஏரோபுளோட் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம் எப்படி இலங்கைக்கு வந்து என்பதனைப் பார்ப்போம். இந்த நிறுவனத்துக்கு 180 விமானங்கள் வரை இருக்கின்றன. இவை அனைத்தும் ரஷ்யாவுக்குச் சொந்தமானவை அல்ல ஆனால் இந்த ரஷ்ய நிறுவனத்தின் பதிவில் வாடகைக்கு அமர்த்தப்பட்டவை.

உக்ரைன் போர் காரணமாக இன்று மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பல வழிகளில் தொந்தரவு கொடுத்து வருகின்றன. அதனால் மேற்த்திய நாடுகள் அல்லது அதற்கு சார்பான நாடுகளுக்கு இந்த நிறுவனத்தின் விமானங்கள் பறப்பதில் சிக்கல்கள் ஆபத்துக்கள் இருக்கின்றன. இதனால் ரஷ்யா விமானங்கள் அந்தப் பக்கம் தலை காட்டுவதில்லை.

இந்தப் பின்னணியில் ரஷ்யாவிலுள்ள மக்களுக்கு மேற்குப் பக்கமாக உல்லாசனம் போவதில் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அத்துடன் ரஷ்யர்களின் பெரும் தொகையான சொத்துக்கள் அங்கு முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால்தான் இன்று பெரும் தெகையான ரஷ்யா உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வந்து போகின்றார்கள். தனிப்பட்ட ரீதியில் புதின் கூட ஒரு நிகழ்ச்சியில் இலங்கைதான் தற்போது உல்லாசம் போவதற்கு ரஷ்யர்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று சொல்லி இருக்கின்றார்.

ரஷ்யாவின் இந்த விமான நிறுவனம் பயணங்களை மேற்கொள்வதற்கு மூன்று நாடுகள்தான் பாதுகாப்பு என்று இனம் கண்டு, அதில் முதலாவது பயணத்தை துவங்கிய நாடு இலங்கை என்பது இங்கு கவணிக்கத்தக்கது. ஆனால் தங்களது விமானம் இங்கு வந்து போவதில் ஏதாவது தெந்தரவுகள் வருமா? என்று ஆராய்ந்து பார்த்து அப்படி ஏதும் நடக்காது என அதற்கான எழுத்துமூல உத்தரவாதத்தையும் பெற்றுக் கொண்டுதான் இங்கு தனது பயணத்தை துவங்கியது.

அதன் பின்னர் அந்த நிறுவனத்தின் 24 விமானங்கள் இங்கு வந்து போய் இருக்கின்றன. பெருந் தொகையான ரஷ்ய உல்லாசனப் பிரயாணிகள் இங்கு வந்து போய் இருக்கின்றார்கள். தற்போதும் 2500 வரையிலான ரஷ்ய உல்லாசனப் பிரயாணிகள் நாட்டில் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில்தான் நீதி மன்றத்தின் இந்தக் குழறுபடிகள் நடந்திருக்கின்றது. இதற்கிடையில்தான் இங்கு ரணில் பிரதமராகியும் இருக்கின்றார். இப்போது இதன் பின்னணியை ஒருவர் கணக்குப் போட்டுப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த நிகழச்சியில் கூட சதி வேலைகள் இருக்க வாய்ப்பு இருக்கின்றது. இன்று இலங்கைக்குத் தேவையாக இருப்பது வெளி நாட்டுப் பணம் இந்த சம்பவத்தின் மூலம் அதற்கு ஆப்பு வைக்கின்ற முயற்சிகள் நடந்திருக்கலாம்.

நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பூவுக்கு அழிவு! தலைக்கு வாழ்வு! என்ன அட்டகாசமான கதை இது!

Next Story

பாண் விலை 1500 ரூபா - 100 ரூபா பயணத்திற்கு 1790 ரூபா