ரணில் OUT!  தலைவிதியை தீர்மானிக்கும் பசில்

”பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் காலமும் முடிவடைகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கால அவகாசம்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரச்சினைகளை தீர்ப்பதாக பிரதமர் கோரிய கால அவகாசம் இன்னும் சில நாட்களில் முடிவடைகின்றது. பிரதமரின் தலைவிதியை பசில் தரப்பு தீர்மானிக்கும்.

எரிபொருள் தட்டுப்பாடு

எரிபொருளின் விலைகள் 50 ரூபா, 100 ரூபாவில் அதிகரிக்கும் போது பிரதமர் என்ன செய்கின்றார் என்பது கேள்விக்குறி” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தார்.

என்ற போதும் நாட்டில் நாளுக்கு நாள் நெருக்கடி நிலையானது தீவிரமடைந்து வருவதாக பல தரப்பினரும் விசனம் முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய பக்கமிருந்த எதிர்ப்பலை தற்போது ரணில் விக்ரமசிங்க பக்கமும் திரும்ப ஆரம்பித்துள்ளது.

அத்துடன் ராஜபக்சர்களை பாதுகாக்கும் பாதுகாவலனாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாகவும் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

விலங்கிடப்பட்ட தேசம்!

Next Story

தம்மிக பற்றி அணுர!