ரணில் பலமே சஜித் செயல்கள்!

நஜீப்

சஜீத் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் நாள்தோரும் ஏதோ ஒரு குழப்பம் நடந்து கொண்டிருக்கின்றது. அதனைச் சமாளிக்க நிமிடத்திற்கொரு முடிவை சஜித் எடுக்க வேண்டி வருகின்றது. ஜனாதிபதி ரணிலின் சர்வ கட்சி மா நாட்டில் கலந்து கொள்வதில்லை என்று சொன்னவர்.

சில மணி நேரங்களின் தனது முடிவை மாற்றிக் கொண்டு இல்லை போய்ப் பார்ப்போம் அங்கு என்ன நடக்கின்றது என்று சுருதியை மாற்றி அங்கு போய் இருந்தார். கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக மனோ தரப்பு கொடுத்த அழுத்தம்தான் இந்த பல்டிக்குக் காரணம் என்று தெரியவருகின்றது.

சஜித்தின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக செல்வாக்கான அரசியல் ஆய்வாலர் தயான் ஜயதிலக்க கூறும் போது, சஜித்தின் பலயீனமே ரணிலின் பலம் என்று சுருக்கமாகச் சொல்லி இருக்கின்றார். உறுப்படியான ஒரு எதிர்க் கட்சி நாட்டில் இல்லாமல் இருப்பதால்தான் ரணில் இப்படியெல்லாம் தான்தோன்றித்தானமாக சட்டம் சம்பிரதாயங்களை மதிக்காமல் காலத்தை ஓட்ட முடிகின்றது என்பது தயான் கருத்து. அர்ஸா, கபீர், டிரான் தள்ளி நிற்க, டலஸ் ஆட்கள்தான் இப்போது சஜித்தின் ஆலோசகர்கள் என்ற நிலை அங்கு.

நன்றி: 30.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக சாணக்கியன் தெரிவு!

Next Story

குர்ஆன் எரிப்பதை தடை செய்ய டென்மார்க் பரிசீலனை