ரணில் பற்றி தயாசிரி சொன்னது!

நஜீப்

நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல்

நான் காலியில் நடந்த ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருநதேன். அப்போது எனக்கு ஒரு துண்டு வந்தது. பேச்சை நிறுத்திவிட்டு மேடையிலிருந்து இறங்குங்கள் என்று அதில் சொல்லப்பட்டது.

நான் அதிர்ந்து போனேன் காரணம் கேட்டால்  நான் மேடையில் இருப்பதால் ரணில் மேடைக்கு வர மறுக்கின்றாராம். நான் பேச்சை நிறுத்தி விட்டு இறங்கினால் மட்டுமே அவர் மேடைக்கு வருவராம். எனக்கு வேறு வழிகள் இருக்கவில்லை.

இந்தக் கதையை சொன்னவர் தயாசிரி தயாசேக்கர. இன்று அந்த ஆளுக்காகத்தான் தெருவில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார் இந்த தயா. அதனால்தான் அரசியல் என்றால் சாக்கடை என்று சொல்லிவைத்தார்கள் போலும்.

ஆனாலும் புனிதமானதும் தூய்மையானதுமான அரசியல் பற்றிய கதைகளும் நிறையவே இருக்கத்தான் செய்கின்றது. சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவை பற்றிய தகவல்களையும் வாசகர்களுக்கு சொல்லாம் என்று இருக்கின்றோம்.

Previous Story

සෙව්වන්දිගේ පෙම් පලහිලව්වක් එළියට! "අරූට කියලා ඌට ගස්සව ගන්න! මායම් කතාව මෙන්න |

Next Story

நேப்பாளில் சிக்கிய செவ்வந்தி | ஸ்கெட்ச் போட்டு தூக்கிய INTERPOL | யார் இந்த அழகிய கொலைகாரி ?