ரணில் ஆட்சி எப்போ முடியும் !

-நஜீப்-

நாட்டில் உள்ள அரசியல் யாப்பு சட்டம் நீதி என்ற விதி முறைகளைக் குப்பையில் போட்டு விட்டு இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே யாப்பிலுள்ள வார்த்தைகள் சட்டத்திலுள்ள விதி முறைகள் எல்லாம் இன்று நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முன்னே செல்லாக் காசுகள் என்பது உறுதியாகி விட்டது.

எனவே உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பது எவருக்கும் தெரியாது. ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் கதையும் இதுதான். ரணிலுக்காக பேசுகின்றவர்கள் கதைகளின் படி அவர் இன்னும் பத்து வருடங்களுக்கு அதிகாரத்தில் இருந்தால்தான் இந்த நாட்டை சீர் செய்ய முடியும் என்று அதற்கு வேறு விளக்கம் சொல்கின்றார்.

இப்போது புதிதாக 2025ல் நாம் உலகிலே வல்லாதிக்க நாடாக இலங்கையை மாற்றுவோம் என்று வேறு ரணில் புதுக் கதைவிடுகின்றார். அப்போது சீனா அமெரிக்கா ஜப்பான் சிங்கப்பூர் என்ற வளர்ந்த நாடுகளையும் விஞ்சி விடுவோமாம்! அவர்களுக்கும் கடன்களை எம்மால் வழங்க முடியுமாக இருக்கும் என்று வேறு பல நம்பிக்கைகள். கடவுளே! இப்படியும் கனவுகள் கற்பனைகளா? அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை கதை கேட்கும் நமது தலைகளில் கொம்புகள் வளர்கின்றது போலும்  தொட்டுப் பார்த்துக் கொள்வது நல்லது.

நன்றி: 02.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சிறந்த ஏமாளிகளுக்கான விருது! 

Next Story

அரை நிர்வாணப் படமும் கொலையும்!