ரணிலை விமர்சிக்கும் நாமல்!

-நஜீப்-

மஹிந்த ராஜபக்ஸ தனது கட்சிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் அதே நேரம், தற்போது தனது அரசியல் வாரிசு நாமலின் நடவடிக்கை அதற்கு எதிராக  இருப்பதை அவதானிக்கு முடிகின்றது. இது உபதேசம் உனக்கல்ல ஊருக்கு என்ற கதையாகத்தான் இருக்கின்றது.

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பு நடக்கின்ற நேரத்தில் அங்கு நாமல் பிரசன்னமாகி இருக்கவில்லை. அத்தோடு  தந்தை மஹிந்தாவும் மகனுடன் சேர்ந்து அந்த வாக்கெடுப்பை பகிஸ்கரித்திருக்கின்றார் என்பதுதான் உண்மை. மேலும் ரணில் பற்றி நாமல் இப்படி ஒரு கருத்தையும் பதிவிட்டிருக்கின்றார்.

ஜனாதிபதி ரணிலின் அரசியல் என்பது மேல் மட்ட  வர்க்க சமூகத்தைப்  பின்னணியைக் கொண்டது. நாம் கீழ் மட்ட மக்களின் உணர்வுகளை மதித்தும் புரிந்து அவர்களுடன் இருந்துதான் அரசியல் செய்து வந்திருக்கின்றோம்.

எனவே ரணில் எடுக்கின்ற எல்லாத் தீர்மானங்களையும் நமக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என நாமல் ராஜபக்ஸ பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். இது இந்த நாட்களில் சமூர்தி அல்லது ‘அஸ்வெசும’ தொடர்பாக எழுந்திருக்கின்ற நெருக்கடிகள் தொடர்பாக நாமலின் நகர்வு என்றுதான் ரணில் மீதான அவரது விமர்சனம் என நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

தேசபக்த தேரர் நெருக்கடியில்!

Next Story

அரேபிகள் அமெரிக்காவுக்கு ஆப்பு!