யார் கதையைத் தான் நம்புவது!

-நஜீப்-

ஜனாதித் தேர்தல்தான் முன்கூட்டி வருகின்றது என்று ரணில் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினாலும் அப்படி நடாக்காது என்று உதயங்க வீரதுங்ஹ கூறிவருகின்றார். பிரதமர் தினேஸ் குனவர்தன நாடாளுமன்றத்தை தற்போது ஜனாதிபதிக்கு வேண்டிய நேரத்தில் கலைத்து விட அதிகாரம் வந்திருக்கின்றது.

1 Billion LKR remittted to Rajapaksa's cousin, Ambassador Udayanga's  account • Sri Lanka Brief

 ஆனால் அவர் அப்படிச் செய்ய மாட்டார் என்றார் தினேஸ். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறித்து காலத்துக்கு முன் ஒரு போதும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க மாட்டார் என்பதனை தான் உத்தரவாதம் தருகின்றேன் என்று கூறுகின்றார். ஆனால் ராஜபக்ஸாக்களின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளர் உதயங்க வீரதுங்ஹ அடித்துச் சொல்கின்றேன் .

Basil Rajapaksa urges General Election first, while President focuses on  Presidential Polls - Sri Lanka

வருகின்ற ஆகஸ்ட் பத்தாம் (10)) திகதி நாட்டில் பொதுத் தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டு விட்டது என்பது அவர் வாதம். இது பிள்ளையையும் கில்லி தொட்டிலையும் ஆட்டும் பசிலின் விளையாட்டு என்றும் ஒரு கதை அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இதன் பின்னணியில் ஏதாவது ஒரு மர்மம் இருக்கலாம்.

நன்றி: 25.05.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

ரணிலின் அஸ்ரஃப் காட்சியகம்!

Next Story

மேற்கு வங்கம்: 77 சாதிகளின் ஒபிசி அந்தஸ்து ரத்து:அரசியல் சர்ச்சை