யாரிந்த தனீஷ் அலி!

-நஜீப்-

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நிகழ்வொன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈத்திருந்தது. இதில் சம்பந்தப்பட்டவர் தானீஷ் அலி. குருனாகல- பறஹாதொனியாவைச் சேர்ந்தவர்.

அவர் ஒரு உதைப்பந்தாட்ட வீரர். லண்டனில் எம்பி.யை முடித்திருந்தவர். அங்கு வேலைவாய்ப்பை தேடிக் கொள்ள அவருக்கு ஆயிரம் வழிகள் இருந்தன.

கடமைகள் நிமித்தம் அடிக்கடி வெளிநாடு போய் வருபவர்.  என்றாலும் தாய் நாட்டுக்கான விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்தார். தொடர்ந்தும் களத்தில் முன்னணியில் நின்று போராடினார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது அங்கும் ஹீரோவாக நின்றிருந்தார். வழக்கம் போல் தனது பணிகளுக்காக டுபாய் போக விமானம் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது இலங்கை காவல் துறையினர் விமானத்துக்குள் புகுந்து ஆளை இழுத்து வெளியே எடுத்து வந்த சம்பவம் உள்ளநாட்டில் மட்டுமல்ல உலகம் பூரவிலும் பரபரப்பான ‘லைய்வ்’ செய்தியானது.

இராஜதந்திர ரீதியில் இது இலங்கை அரசுக்கும் விமான நிறுவனத்துக்கம் பெரும் தலை குனிவாகப் பார்க்கப்படுகின்றது. வேடிக்கை, கைது செய்யப் போன அதிகாரிகள் எந்த ஆவனங்கைளையும் வைத்திருக்கவில்லை.

அதனால் சக பயணிகள் அங்கு தனீஷூக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனீஷக்கு இன்று நாட்டில் ஹீரோ நிலை.

நன்றி:31.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இலங்கை: பொருளாதாரம்  அடுத்த 6 மாதங்கள்?

Next Story

விமல் மீண்டும் பல்டி!