யானை காட்டில் மொட்டு சேற்றில்!

-நஜீப்-

அரசு ஆதரவு மொட்டு-யானைக் கட்சியினர் இது வரை தமது தேர்தல் பரப்புரைகளைத் ஆரம்பிக்கவில்லை. இதனால் யானை காட்டுக்குல் ஓடிவிட்டது. தாமரை மொட்டு சேற்றில் சிக்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

மக்கள் மத்தியில் போய் வாக்குக் கோட்டால் அவர்கள் தம்மைத் துரத்தியடிப்பார்கள் என்ற அச்சம் இதற்குக் காரணமோ தெரியாது. ஆனால் ஆளும் தரப்பினர் தமது தோல்வியை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளும் கதைகள் தற்போது அம்பலமாகி வருகின்றது.

மொட்டுக் கட்சி ஹம்பாந்தோடை;டை மஹிந்த அமரவீர இந்த முறை நடக்கின்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை வராது. நாடுபூராவிலும் உள்ளூராட்சி சபைகளுக்கு தொங்கு சபைகள்தான் அமையும் என்று கூறுகின்றார்.

அதே போன்று இந்த முறை தேர்தலில் ஐதேக.வுக்கும் ஜேவிபி.க்கும் இடையில்தான் நேரடிப் போட்டி என ரணில் பாட்னரும் கட்சியின் பிரதித் தவிசாளருமான அகில விராஜ் சொல்லி வருகின்றார்.

ஐதேக. பற்றிய அவரது கதை தன்னைத்தான் புகழ்வது என நாம் எடுத்துக் கொண்டாலும் ஜேவிபி. வெற்றியை ஆளும் மொட்டு-ஐதேக.வும் உறுதி செய்வது இதிலிருந்து தெரிய வருகின்றது.

நன்றி: 05.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

எங்கள் பயணம் தொடரும்-சங்ககாரா!

Next Story

பாகிஸ்தானில்  முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்