யானையும் ஐஸ் போதையும்!

நஜீப்

நன்றி 14.09.2025 ஞாயிறு தினக்குரல்

இந்த நாட்டில் கெண்டேனரில் ஐஸ்  மூலப்பொருள் கொண்டுவரப்பட்டது நாம் அறிந்த வகையில் இதுதான் முதல் முறை.

அது மட்டுமல்ல ஐஸ் தொழிற்சாலைகள் இயந்திரங்கள் கூட நாட்டில் இயங்கி வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

இந்தளவுக்கு போதை வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதற்கு அரசியல்வாதிகள்  ஒத்துழைப்பே காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.

சுமார் ஐம்பது ஆயிரம் (50000) கிலோ ஐஸ் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதனை விளங்கும்படி சொல்வதாக இருந்தால்  சுமார் வளர்ந்த ஏழு எட்டு (7-8) யானைகளின் அளவு என்று சொல்ல முடியும்.

இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் யானைகள் சுமார் ஏழு எட்டு ஆயிரம் கிலோ வரை என்பதால்தான் இந்தக் கணிப்பு.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் போதை வியாபாரிகளுடன் கூட்டணி போட்டுதான் இந்த வியாபாரத்தை செய்து வந்திருக்கின்றார்கள்.

எனவே பெற்றோர்களே போதை பொருட்கள் தொடர்பில் உங்கள் பிள்ளைகளுடன் கலந்துறையாடுங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்.

Previous Story

කෙල්ලෙක් කියලා රැවටුන ඉන්දුනිෂියාවෙදී පද්මේ ලා අල්ලපු සමාජ මාධ්‍ය තරුව පොලිස් නිලධාරියාගේ කථාව

Next Story

ඔන්න ලසන්ත මැරුව හැටි ආරක්ෂාවට රටින් පැන්න සී.අයි.ඩී. නිලධාරියෙක් ලෝකෙටම හෙලිකරපු කතාව