நஜீப்
நன்றி: 31.05.2026 ஞாயிறு தினக்குரல்
மௌலானா ஈஸ்டர் கதைகள் ஒன்றும் புதியவையல்ல. அவர் இவற்றை ஐ.நா.வுக்கும் கொடுத்திருக்கின்றார். கடந்த காலங்களில் அவற்றை இங்கு மறைத்து விட்டனர். இன்று அப்படி இல்லை. தகவல்கள் மக்களுக்கு சேர்கின்றன.
மௌலானா இயற்பெயர் மிஹ்லார் முஹம்மட் ஹன்சீர். பிரபாவுடன் பிளவுபட்ட கருணாவுக்கு (ரிஎம்விபி.க்கு) டக்லஸ் தேவானந்தா தான் மௌலானாவை கொடுத்திருக்கின்றார்.
ரிஎம்விபி. இவருக்கு சுகுந்தன் எனப் பெயரிட்டது. 2005 ஜனாதிபதி தேர்தலில் ரிஎம்விபி மஹிந்தாவை ஆதரித்தனர்.
இவர்களை கோட்டா(எல்பா) சென்னை-கோலன் பீச் ஹோட்டலில் சந்தித்தார். மஹிந்த ஜனாதிபதியானதும் தானே பாதுகாப்பு செயலாளராக வருவதாகவும் சொன்னார்.
இந்த சந்திப்பில் சலே(சேம்) கருணா கலந்து கொண்டதை மௌலான உறுதிப்படுத்துகின்றார். இந்த உறவு ஈஸ்டர் தாக்குதல்வரை நீடித்ததை மௌலானா ஆதாரங்களுடன் விபரிக்கின்றார்.
மௌலானா தந்தையும் ஒரு ஈழப் போராளி. இவர் இந்தியாவில் கொல்லப்பட்டார். இது பற்றி நாம் முன்பு ஒரு முறை விரிவாக சொல்லி இருந்தோம்.





