-நஜீப்-
தற்போது தேர்தல் வெற்றி வாய்ப்புக்கள் தொடர்பான பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் ஒரு நாற்பது சதவீதமானவர்கள் தமது ஆதரவு யாருக்கு என்று வெளிப்படையாகச் சொல்ல தயாராக இல்லை என்று அந்த கணிப்புக்கள் கூறுகின்றன.
அந்த எண்ணிக்கை ஒன்பது மில்லியன் என்று அளவில் (90 இலட்சம்) அமையும். ஆனால் ஆச்சர்யமான கதை என்னவென்றால் இவர்கள் அனைவரினதும் வாக்குகளும் ஜனாதிபதி ரணிலுக்குத்தான் என்று கூறுகின்றார் ஜனாதிபதி ரணிலின் ஆலோசகர் ஆசு மாரசிங்ஹ. இதே கருத்தை வேலு குமாரும் உறுதி செய்கின்றார்.
ஆசு வாங்குகின்ற சம்பளத்துக்கு இந்த கணக்கை சொல்லி இருக்கலாம்.! அடுத்தவர் அதனை உறுதி செய்வதிலும் இரகசியங்கள் இருக்கத்தானே வேண்டும். அதனை நாம் செல்லவில்லை திகாம்பரத்திடம் கேட்டுப்பாருங்கள்கள் சங்கதி புரியும்.
நன்றி 01.09.2024 ஞாயிறு தினக்குரல்