மோடி அமெரிக்காவில் நெகிழ்வு!

-யூசுப் என் யூனுஸ்-

நான் வெள்ளை மாளிகைக்குப் பலமுறையில் வந்து போய் இருக்கின்றேன். ஆனால் இந்த முறை அது ஒரு ஸ்பெஷலாகத்தான் எனக்குத் தெரிகின்றது என்று அவர் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார். மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வமான பயணத்தை அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருக்கின்றார்.

வெள்ளை மாளிகை வந்த மோடியை ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்று தனது பிரதிநிதிகளை மோடிக்கு அங்கு அறிமுகம் செய்து வைத்தார். அங்கு பேசிய மோடி தனக்கு நண்பர் பைடன் சிறப்பான வரவேற்பொன்றை வழங்கினார். அதற்காக அவருக்கு நன்றியுடையவனாக இருக்கின்றோன் என்றார் மோடி.

நான் நெகிழ்ந்து போவதற்குக்கு முக்கிய காரணம் முன்பை விட வெள்ளை மாளிகையில் அதிகமான இந்தியர்களுக்கு பைடன் ஆட்சியில் கதவுகள் திறக்கப் பட்டிருக்கின்றது என்பதால்தான் தனக்கு  இந்த நெகிழ்ச்சி. என்றார் அவர். மேலும் அமெரிக்க-இந்திய நெருக்க உறவுகள் பற்றி நாம் இருவரும் பேச இருக்கின்றோம்.

அந்த உறவுகள் வளர்கின்ற போது அது உலகிற்கு பெரும் நன்மைகளைக் கொடுக்கும் என்றும் மோடி அங்கு பேசி இருக்கின்றார். அதே போன்று இந்தியாவையும் மோடியையும் பைடன் பெருமையாகப் புகழ்ந்தும் இருக்கின்றார்.

நமக்குத் தெரிந்த அரசியல்படி மோடி மிகுந்த இராஜதந்திரத்துடன்தான் வெள்ளை மாளிகையில் பிடி கொடுக்கமால் வார்த்தைகளை வெளியிட்டிருக்கின்றார். தனது நடுநிலைப் போக்கை அங்கும் அவர் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றார் என்பது நமது கருத்து.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சிறுபான்மையினர் குறித்து மோதியுடன் பேசியிருப்பேன் - ஒபாமா

Next Story

புதினுக்கு புதிய நெருக்கடி 'வாக்னர்' பின்புலம் என்ன?