பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு சென்றுள்ளார். இஸ்ரேலும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு – பிரதமர் மோடி இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனி விமானத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர். விமானத்தில் இருந்து மோடி இறங்கியதும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புன்னகையுடன், மோடியை வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டு புன்னகை தழும்ப பரஸ்பரம் நலம் விசாரித்து கைக்குலுக்கியபடி பேசினர்.
அதன்பிறகு நெதன்யாகுவின் மனைவி சாரா பிரதமர் மோடி அருகே வந்தார். மேற்கத்திய கலாசாரப்படி அவர் பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்க முயன்றார். ஆனால் மோடி சரியாக கவனிக்கவில்லை. அடுத்த நொடியில் பிரதமர் மோடி, சாராவிடம் கையை நீட்டினார். இருவரும் கைக்குலுக்கி நலம் விசாரித்து கொண்டனர்.
அப்போது, ”எப்படி இருக்கிறீர்கள் சாரா’ என்று மோடி உற்சாகத்துடன் நலம் விசாரித்தார். இந்த சமயத்தில் இன்னொரு சுவாரசியமான விஷயம் நடந்தது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவி சாரா காவி நிறத்தில் ஆடை அணிந்திருந்தார். அதேபோல் பிரதமர் மோடி அணிந்திருந்த கோர்ட்டின் பாக்கெட்டில் ‛Packet Square’ வைத்திருந்தார்.
இதை கவனித்த நெதன்யாகு மோடியை பார்த்து, ”கவனிச்சீங்களா… நீங்கள் இருவரும் ஒரே நிறை உடையில் வந்து இருக்கிறீர்கள்” என்று கூறினார். இதை கேட்டு சிரித்த மோடி,”ஆமாம்… ஆமாம்… நாங்கள் காவி நிறத்தில் வந்திருக்கிறோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பிரதமர் மோடி, பிரதமர் நெதன்யாகு இடையே இருக்கும் நட்பை பார்த்து இஸ்ரேல், இந்திய அதிகாரிகள் பூரித்து போனார்கள். இந்த வீடியோவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, ‛வெல்கம் மை டியர் மோடி’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



