மொட்டுக் கட்சிக்குள் ரணில் அணி!

-நஜீப்-

தமக்கு வழங்குவதாகச் சொல்லப்பட்ட அமைச்சுக்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் சிரேஸ்ட மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றார்கள். தமது முறைப்பாடுகளை மஹிந்த ராஜபக்ஸவிடமும் பசிலிடமும் தினம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தில் புத்தளத்து சாந்த நிசந்த  முன்னணியில் இருக்கின்றார்கள்.

மாவட்ட ரீதியில் அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்கு முதலில் அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டும் என்பது சாந்த வாதம். நிமல் லன்சா ஜனாதிபதியுடன் தற்போது நெருக்கமாக செயல்பட்டு வருவதனால் மொட்டுக் கட்சிக்குள் ரணில் அணியென்று தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

அதனை நிமல் லன்சா நெறிப்படுத்தி வருகின்றார். ஜனாதிபதி ரணில் லண்டன், பிரான்ஸ் பயணத்தின் பின்னர் இந்த அமைச்சு நியமனத்துக்கு ஜனாதிபதி ரணில் பதில் தர வேண்டும் என மஹிந்த மற்றும் பசில் தரப்பினர் எதிர்பார்க்கின்றார்கள். வஜிர அபேவர்தனாவைக் கைக்குள் போட்டுக் கொண்டு நிமல் லன்சா காரியம் சாதித்துக் கொண்டிருப்பதாகவும் மொட்டுக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றார்கள்.

மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ரணில் அண்மையில் கொடுத்த அழைப்பைக்க கூட அவர்கள் நிராகரித்து செயலாளரை மட்டு அதற்கு அனுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.!

நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 "சீக்ரெட் ஆவணங்கள்.." வசமாக மாட்டிய டிரம்ப்..

Next Story

சாதி பாகுபாட்டிற்கு எதிராக மசோதா USA: செனட் உறுப்பினருக்கு கொலை மிரட்டல்