நஜீப்
நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல்
நமது அரசியல்வாதிகளின் முகமூடிக்கு இது நல்லதொரு சான்று. தேர்தலுக்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டிடமிருந்து ஒரு மில்லியன் டொலர்களைக் கேட்ட பதிவுகள் (1987 ஆகஸ்ட் 6 மற்றும் 14 திகதிகள்) தற்போது கசிந்திருக்கின்றது.
இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சிலிருந்து பதிவுகள் நீக்கப்படும் போதுதான் இது அம்பலமாகியுள்ளது. ஸ்ரீ மா அம்மையார் இஸ்ரேல் தூதரகத்தை விரட்ட ஜே.ஆர். அதிகாரத்துக்கு வந்ததும் மீண்டும் திறந்தது தெரிந்ததே.
இந்தக் கதையில் இருக்கின்ற மறுபக்கம் என்னவென்றால். இஸ்ரேல் தூதரகத்துக்கு அங்கீகாரம் என்றதும் முஸ்லிம்கள் கொதித்துப் போனார்கள். அன்று இந்த உறவும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் ஏ.சீ.எஸ். ஹமீட் ஊடகத்தான் நடந்திருக்கின்றது.
அவர்தான் ஜே.ஆரின் நம்பிக்கைக்குரிய வெளிவிவகார அமைச்சர். முஸ்லிம் தலைவர்கள் பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாளும் காட்டும் அரசியலுக்கு இது நல்ல சான்று.




