மொசாட் உளவாளிகள் பற்றி அதிரடித் தகவல்கள்!

நஜீப் பின் கபூர்

Who Is Catherine Perez-Shakdam? Mossad Mole That Undermined Iran From Within To Trigger June 13 Israel Strike- A Story Of Faith & Espionage - News24

இராணுவ ரீதியில் நம்பர்வன் அமெரிக்க. இரண்டாம் இடம் ரஸ்யா. மூன்றாம் இடம் சீனா. நான்காம் இடம் இந்தியாவுக்கு.

இன்று உலகில் இருக்கின்ற மிகவும் செல்வாக்கான உளவு நிறுவனம் மொசாட். என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று இராணுவ ரீதியில் பலமான ஒரு நாடு இஸ்ரேல்.

இராணுவ தரவரிசையில் ஈரான் 14 இடம். இஸ்ரேலுக்கு 15 இடம். இஸ்ரேலின் இராணுவ வல்லமைக்கு அடிப்படை மொசாட்.

இந்த மொசாட் பற்றி இதுவரை யாரும் தராத பல தகவலை நாம் இங்கு தருகின்றோம்.

இஸ்ரேல் படைகளில் 190000 பேர் வரைதான். ஆனால் மொசாட்டில் 220000 பேர்வரை பணியாற்றுகிறார்கள். அதில்

யூதர்கள் 44000 -20%
முஸ்லிம்கள் 77000 -35%
ஏனையோர் 99000 – 45%

இஸ்ரேல் அரசு இவர்களுக்கான செலவில் 30 சதவீதத்தையும் உலகம் பூராவிலுமுள்ள யூத சமூக தனவந்தர்கள் இதில் 70 சதவீதத்தை பெறுப்பேற்று மொசாட்டை வழி நடாத்தி வருகின்றனர்.

இங்கு கூட டொலருக்காக மொசாட்டில் பணிபுரிகின்றவர்கள் இருக்கின்றார்கள். உலகம் பூராவிலும் இவர்கள் சராசரி மனிதர்கள் போல செயல்பட்டு வருகின்றார்கள்.

பொரும்பாலும் இதிலுள்ள யூதர்கள் வழிகாட்டிகளாகவும் நெறியாளர்களாகவும் மொசாட்டில் பணியாற்றி வருகின்றார்கள்.

An Israeli Agent Finds Herself Stranded In 'Tehran' In A Gripping New Spy Series | 90.5 WESA

ஈரானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரைசி வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போல ஒரு பெண் ஊடகவியலாளர் பணியாற்றி ரைசி கொலைக்கு முன்னர் அங்கிருந்து தலைமறைவாகி இருந்தார் என்பது உலகம் அறிந்த கதை. அவரும் ஒரு மொசாட் உளவாளி என்பது அவர் இஸ்ரேல் சென்ற பின்னர் தெரிய வந்தது.

அதே போன்று டெஹ்ரான் பள்ளிவாயிலில் இமாமாக ஒரு மொசட் உளவாளி பத்து வருடங்கள் வரை பணியற்றி இருந்தார்.

ஈரான் இராணுவத் தளபதி ஒருவரே மொசாட் உளவாளியாக செயலாற்றி ஆன்மீகத் தலைவர் அலி கமெய்னி கொலையுடன் அவரும் தப்பி ஓடி இருக்கின்றார்.

அந்த நேரத்தில் 40 வரையிலான இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் ஜனரஞ்சகமான ஈரான் தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஹமாஸ் தலைவர் ஹனியா ஆகியோரையும் இவர்தான் காட்டிக் கொடுத்தார் என்று சொல்லப்படுகின்றது.

ஈரானுக்குள்ளே இப்படி அவர்கள் வெற்றிகரமாக செயல்பட முடியுமாக இருந்தால் சவுதி கட்டார் குவைத் போன்ற அமெரிக்க-இஸ்ரேல் நட்பு நாடுகளில் இவர்கள் எந்தளவுக்கு சுதந்திரமாக செயல்பட முடியும்.?

இப்படி உலகில் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் இவர்கள் பணியில் இருக்கின்றார்கள். அவர்கள் சராசரி மனிதர்கள்-தொழிலாளர்கள் போல செயல்படுவதால் அவர்ளை இனம் காண்பது சிரமம்.

தற்போது ஈஸ்டர் தாக்குதலில் தடுப்புக்காவலில் இருக்கின்ற முன்னாள் பணிப்பாளர் துவான் சுரேஸ் சாலே கூட மெசாட் உளவாளி. அவர் இஸ்ரேலில் பயிற்சி பெற்றார் என்றும் தகவல்கள் வருகின்றன.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட கூட மெசாட் உளவாளி என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் சில ஆயிரம் பேரும் இங்கு சில நூறு பேரும் மொசாட் உளவாளிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இது எல்லாம் சரி முஸ்லிம்கள் பற்றி நாம் சொல்கின்ற தரவுகள் மூக்கில் விரல் வைக்க வேண்டி இருக்கும்.

சியா சுன்னி பிளவுகளை உலகம் பூராவிலும் பரப்பி-வலுப்படுத்தி முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகளைத் தோற்றுவிப்பதில் இவர்கள் அதிக அக்கரையுடன் இருக்கின்றார்கள்.

இது அவர்களுக்கு நல்ல பலன்களைகயும் கொடுத்திருக்கின்றது. காசுக்காக முஸ்லிம்களில் பல்லாயிரக்கணக்கில் மொசாடில் இணைந்திருக்கின்றார்கள்.

இன்னும் பலர் தாம் மொசாடுக்காக உளவு பார்க்கின்றோம் என்று அறியாமலே அதில் பணியாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

இஸ்ரேலில் மொசட் நடாத்துகின்ற இஸ்லாமிய போதனை நிலையங்கள்-மதரசாக்கள் டசன் கணக்கில் இருக்கின்றன. இது தவிர உலகில் ஆயிரக்கணக்கான மொசாட் பல்வேறு நிறுவனங்களை நடாத்திக் கொண்டு அதன் மூலம் தமது பணிகளை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றன.

உலகம் பூராவிலுமுள்ள பல ஆயிரம் பள்ளிவாயில்களில் மொசாட் உளவாளிகள்தான் இமாம்களாக இன்றும் பணிபுரிந்து வருகின்றார்கள்.

எண்ணிக்கையில் மிகவும் குறைவான மொசாட் உளவாளிகள் செயல்படும் நாடு வட கொரிய. அங்கு அவர்கள் பலயீனமாக இருக்கின்றார்கள். ஆனால் அங்கு கூட அவர்களின் செயல்பாடுகள் இருப்பதுதான் இங்கு கவனிக்கத் தக்கது.

Previous Story

ஈரானின் முக்கிய KHARG ISLAND

Next Story

இசுரேல் இப்போ ம..ரண அடி வாங்க காரணமே ஜெராட் குஷ்னர் தான்? |