மைத்திரி 48 கட்சிகளுடன்?

பலம் பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகப் பலம் பொருந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றது.

இந்நிலையில், இதுவரை 48 கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளது எனக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்தே கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக எதிர்வரும் தேர்தல்களில் மிகவும் பலம் பொருந்திய அமைப்பாகச் செயற்படுகளை முன்னெடுக்கப்படும் முடியும் என்று கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இன் நடவடிக்கை கோட்டாபய அரசை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளதாக தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Previous Story

பிரதேசசபை உறுப்பினர் ஜே.எம். நௌபர் : உடதலவின்ன அபிவிருத்திப்பணிகள் 2021

Next Story

நெருக்கடி: தப்புவதற்கு கோட்டாபய முடிவு!