மூன்றில் இரண்டை விலைக்கு வாங்கி பதவியை நீடிக்கும் -சதி-

-நஜீப் பின் கபூர்-

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக துவங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. அதன் பின்னர் ஜனாதிபதிக்கோ நாடாளுமன்றத்துக்கோ அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே இந்த கால இடைவேளைக்கிடையில் ஜனாதிபதித் தேர்தலைத் தடுத்து நிறுத்துவற்கான அதிகாரம் பதவியில் இருக்கின்றவர்கள் கைகளில் இருக்கின்றது. எனவே அதற்கான முழு முயற்சியில் ஜனாதிபதியும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது இறங்கி இருக்கின்றது என்று தெரிகின்றது.இது பற்றி பல வட்டாரங்களில் கருத்துப் பறிமாறல்கள் தற்போது நடந்து வருகின்றான. ஆளும் மொட்டுக் கட்சி குறிப்பாக ராஜபக்ஸாகக்ள் இதனை எதிர்ப்பது போல காட்டிக் கொண்டாலும் அவர்களும் மறைமுகமாக இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கின்றாhகள் என்றுதான் நாம் கருதுகின்றோம்.

இதற்கு நல்ல உதாரணம்தான் நாங்கள் அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்துவதை எதிர்க்கின்றோம் என்ன காரணம் கொண்டும் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கக் கூடாது இது நிறுத்தப்பட் வேண்டும் என்று எழுத்துமூலம் தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதற்குப் பின்னர் அரசு இப்படியாக தனியார் மயப்படுத்த கொண்டு வந்த திட்டங்களுக்கு மெமட்டுக் கட்சினர் ஆதரவாக வாக்களித்துடன் மஹிந்த ராஜபக்ஸாவும் அதற்கு ஆதரவாகக் கைதூக்கி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூக்குடைபட்டிருந்தார். அவரது அரசியல் வாரிசு நாமல் வாக்கெடுப்பு நடக்கின்ற நேரத்தில் நாம் முன்கூட்டி சொல்லி இருந்தது போல அந்த வாக்கெடுப்பில் அவர் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகி இருந்தார். ராஜபக்ஸாக்களின் அரசியல் நாடகம் என்பது இப்போது அனைவருக்கும் தெரியும்.

எனவே ரணிலும் ரஜபக்ஸாக்களும் சேர்ந்துதான் இந்த நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துக் கொண்டு போகின்றாhகள். அரசியல் களம் தமக்கு வாய்ப்பாக இல்லாததால் தேர்தலைத் தள்ளிப் போடுகின்ற இந்த முயறச்சியில் ஒரு இரகசிய இணக்கப்பாடு ரணில்-ராஜபக்ஸாக்களிடையே இருக்கின்றது என்பது எமது கணிப்பு. மொட்டுக் கட்சிக்குள் ரணில் அணி ராஜபக்ஸ அணி என்பது கூட இவர்கள் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக செய்கிள்ற ஏற்பாடுகளாகத்தான் இருக்க வேண்டும். கிராமங்களில் வாயல் வெளிகளில் கிரிக்கட் விளையாடுகின்ற இளசுகள் மாலைப் பொழுதுகளின் இரண்டு அணிகளா பிரிந்து விளையாடி விட்டு தங்கள் வீடுகளுக்கு செல்கின்ற போது தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு நட்புடன் பயணிப்பது போல ஒரு விளையாட்டுத்தான் இந்த அரசியலும்.

நமக்கு இப்படி ஒரு சந்தேகம் ஏன் வருகின்றது என்றால் ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த மஹிந்தனந்த மற்றும் ரத்வத்தை சேமசிங்ஹ விஜேசேக்கர கனக்க ஹேரத் போன்றவர்கள் இப்போது ரணில் விசுவாசிகளாக பணியற்றி வருகின்றாhகள். இவர்கள் மீது மொட்டுக் கட்சியினரோ அல்லது ராஜபக்ஸாக்களோ இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதே நேரம் சீனியர்களான தமது பத்துப்பேருக்கு அமைச்சுப் பதவிகளை க் கொடுக்கமாறு ராஜபக்ஸாக்கள் கட்டயப்படுத்தியும் ரணில் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பது. பொதுத் தேர்தலை முன்கூட்டி நடாத்த வேண்டும் என்று ராஜபக்ஸாக்கள் கொடுத்த அலுத்தங்கையும் கூட ஜனாதிபதி ரணில் மதிக்காமல் நடக்கின்ற போது ராஜபக்ஸாக்கள் தொடர்ந்தும் மௌனமாக இருப்பதும்கூட ஒரு திட்டமிட்ட ஏற்பாடாக இருக்க அதிக வாய்ப்புக்கள்.

இந்த பின்னணியில்தான் தேர்தலை ஒத்திப்போட்டு தனது பதவிக் காலத்தை ஜனாதிபதி ரணில் நீடிப்பதற்கு முயற்சிகளைச் செய்தாலும் அதனையும் மொட்டுக் நாடாளுமன்றத்தில் ஆதரித்து அரசைக் காப்பற்ற இடமிருக்கின்றது. அதற்கு வேறு நியாயம் சொல்வார்கள் இது போன்ற எத்துணையே காட்சிகளை நாம் இந்த அரசியலில் பார்த்திருக்கின்றோம். இப்போது நமது வாதங்கள் சாத்தியமா என்று பார்ப்போம். நமது நாடாளுமன்றத்தில் இன்று 125 வரையிலான உறுப்பினர்கள் ஆளும் மொட்டுத் தரப்பில் இருக்கின்றார்கள். எனவே இப்படி ஒரு பிரேரனையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொண்டால் சர்வசன வாக்கொடுப்பைக் கூட நடத்தாமல் மேலும் ஒரு வருடத்தக்கு ஜனாதிபதி ரணில் அதிகாரத்தில் இருக்க முடியும் என்ற ஒரு வாதம் இருக்கின்றது. இது பற்றி இப்போது ரணில்தரப்பினர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ரணில் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியர்தர்கள் சொல்கின்ற கதைகளின் படி அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைத் தமக்குத் தேவையானால் சுலபமாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்று ரங்கே பண்டார அதற்கும் ஒரு கணக்கை அண்மையில் சொல்லி இருந்தார். ரணிலை ஆதரிப்போர் மொட்டுக் கட்சியில் அறுபது பேர்வரை இருக்கின்றார்கள். சஜித் அணியில் இருபது பேர்வரை ரணிலுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் தயாசிரி, லக்ஸ்மன் கிரியெல்ல, ஹக்கீம் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களில் இருந்து இந்தக் கதை உறுதியாகின்றது. எதிர்க் கட்சியில் இருக்கின்ற ஒரு தொகையினருக்கு மட்டும் ஏன் ஜனாதிபதி விஷேட சலுகை காட்டி அவர்களுக்கு கோடி கோடியாய் அபிவிருத்திப் பணிகளுக்கு பணம் கொடுக்கின்றார் என்று கேட்டதுடன் இதுவும் ஒரு லஞ்சம்தான் என்று அவர்கள் சபாநாயகரிடமும் முறைப்பாடு செய்திருதிருந்தனர் என்பதும் தெரிந்ததே.

எதிரணியில் இருக்கும் கட்சி தலைவர்கள் தமது தரப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் இப்படிப் பணம் கொடுப்பதை எதிர்க்கின்ற போது ஜனாதிபதி கொடுப்பதும் அதனை அவர்கள் எதிர்ப்பதும் என்ன அரசியல் கலாச்சாரம்- நாகரிகம் என்பது ஒரு புறம் இருக்க சஜித் ஹக்கீம் போன்றவர்கள் இப்படியான தமது உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் இருப்பதும் கூட எதிரணி நாடகமே தெரியாது. இதற்கு முன்னர் தமது தனித்துவத ;தலைவர்கள் சொல்லித்தான் நாம் ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது இருப்பதும் தெரிந்ததே. இப்படியான உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று மன்னிப்பு என்றெல்லாம் தலைவர்கள் கதை விட்டதும் தெரிந்ததே. அவை அப்படி ஆனமைக்கும் அரசியல் டீல்களும் காரணமாக இருக்கலாம்.

எனவே ஆளும் தரப்பில் இருப்பவர்களையும் எதிர்க் கட்சியில் இருக்கின்றவர்களையும் சேர்த்து ரங்கே கூறுகின்றபடி கூட்டணியிலும் ரணிலுக்கு ஆதரவாக சிலர் இருக்கின்றார்கள் என்ற கதைகளை எல்லாம் பார்க்கின்ற போது மூன்றில் இரண்டை இவர்கள் எட்டி விட இடமிருக்கின்றது. இதற்காக ஏற்கெனவே பார் பர்மிட்டுக்களும் வழங்கப்பபட்டிருக்கின்றன. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நான்கு கோடி பெருமதியில் வாகனப் பேர்மிட்டுக்களையும் கொடுத்து விட்டால் இந்த மூன்றில் இரண்டிலும் இவர்கள் கரை சேர இடமிருகின்றது. சர்வசன வாக்கெடுப்புக்குப் போகாமலே பணத்தை வைத்து இதனை சாதிக்க இடமிருக்கின்றது. ஆனால் இது இந்த நாட்டில் வாழ்கின்ற குடிமக்களுக்கு எதிராக வரலாற்றில் இடம் பெறுகின்ற மிகப் பெரிய சதியாக அமையும்.

எதிரணிகள் இணைவது கட்டாயம்

பரவலாக பேசப்படுகின்ற நாம் மேற்சொன்ன தகவலை ஆட்சியாளர்கள் முன்னெடுக்க தயாராகுவார்களேயானால் அது மிக்கப் பெரிய ஜனநாயக மற்றும் மக்கள் விரோத செயலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. எனவே இதற்கு எதிராக அணிதிறள வேண்டியது நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ரணில் ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு எப்படி அதிகாரத்து வந்தாரோ அது போன்ற ஒரு செயல்தான் இதுவும். ஆனால் அதற்கு ஒருவகையில் அரசியல் அமைப்பு ரீதியில் அங்கீகாரமும் இடமும் இருந்தது என்பதனையும் நாம் மறுப்பதற்கில்லை.

ஆனால் தேர்தலுக்கு ஆப்பு வைத்துவிட்டு இந்த முறையில் அதிகாரத்தை பணப் பலத்தை வைத்து விலைக்கு வாங்குவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எதிராக குரல் கொடுக்க இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும். இன்று நாட்டில் இருக்கின்ற மிகப் பெரும் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சிகளாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அணுரகுமார தலைமையிலான என்பிபி. யும் இருக்கின்றது. இவை இரண்டும் இன்று பிரதான அரசியல் எதிரிகளாக களத்தில் இருக்கின்றன. ஆளும் கட்சியை விட இந்த இரண்டு கட்சிகளும் இன்று கீறீயும் பாம்பும் போல மோதிக் வருகின்றன. இது ஆட்சியாளர்களுக்கு நல்ல பாதுகாப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

ஆனால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் இந்த இரண்டு செல்வாக்கான கட்சிகளும் தமக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை மறந்து ஐக்கியப்பட வேண்டும். தேர்தல் அறிவிப்பு வருகின்ற போது அவர்கள் தனிவழியில் பயணிப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபனைகள் கிடையாது. யார் வேண்டுமானால் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளட்டும். இது தவிர இன்னும் பல அரசியல் சிவில் அமைப்பகள் இந்த நாட்டில் இருக்கின்றன அவையும் இந்த ஜனாநாயக மீட்புப் போராட்டத்தில் தமது தனிப்பட்ட கொள்கைகளை மறந்து ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஆட்சியாளர்கள் தமக்கு வாய்ப்பாக இருக்குமானால் அதாவது மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு ஒருசில நாட்களில் நாடாளுமன்ற்தில் இந்தப் பிரேரனையைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கின்றது என்பதபை; புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் கூட்டம் போட்டு பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகள் என்றெல்லாம் வருகின்ற போது காலங் கடந்து விடும். ஆட்சியாளர்கள் இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு தயாராகுவார்களேயால் மாற்று நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பதற்கு முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பது ஆரோக்கியமாக இருக்கும் என்பது நமது கருத்து.

இந்த நாட்டில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகளும் அதன் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட நலன்கள் என்றுதான் சிந்திக்கின்றார்கள். இது போன்ற விவகாரங்களில் தமது பங்களிப்பை வழங்குவதில் அவர்கள் மாற்றான் தாய் மன நிலையிதான் செயலாற்றி வருகின்றார்கள் என்பது நமது கணிப்பாக இருக்கின்றது. எனவே அவர்களும் இது ஒட்டுமொத்த குடிமக்களினதும் தேச நலன்களுடனும் இந்த விவகாரம் சம்பந்தப்படுகின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். தமது கட்டுப்பாட்டில் இல்லாத உறுப்பினர்கள் விவகாரத்தில் இவர்கள் ஏதாவது செய்தாக வேண்டும்.

இந்தியா ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு ரணில் இந்தியா சென்றிருந்த போது இலங்கையிலும் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மோடி ஜனாதிபதி ரணிலிடம் கேட்ட போது அவர் ஒரு புன்முறுவலை மட்டும் அங்கு உதிர்த்திருக்கின்றார். எனவே அதற்கு அர்த்தம் என்ன என்று எவருக்கும் தெரியாது. எனவே ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற விடயத்தில் அனைவரும் ஐக்கியமாகவும் அவதானமாகவும் இருந்து கொள்வது நல்லது. இது விடயத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும்.

குடிமக்கள் விழிப்பாகவும் அக்கரையுடனும் கடந்த காலங்களில் செயலாற்றி இருந்தால் நாடு இந்த பாதாளத்துக்குப் போய் இருக்காது. தமது தலைவிதி அப்படி போய் விட்டாலும் தமது எதிர்காலச் சந்ததியினர் மீது அக்கரையுடன் பெரியவர்கள் பெற்றோர்கள் இருப்பார்களானால் நடாட்டில் அரசியல் விவகாரங்களில் நாம் நல்ல அறுவடைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

Previous Story

வாராந்த அரசியல் 16.06.2024

Next Story

மாபெரும் கட்டுரை, சித்திரப் போட்டிகள்-2024