மு.கா.இதயத்தில் குத்திய ஹக்கீம்!

மு.கா.வை தலைவர் அஸ்ரஃப் துவங்கிய நாள் முதல் திகாமடுல்ல-அம்பாறை மாவட்டம் அதன் கோட்டையாகவும் கல்முனை அதன் இதயமாகவும் இருந்து செயல்பட்டு வந்திருக்கின்றது. இந்தத் தேர்தலில் அதன் இதயத்தில் குத்தி ஹக்கீம் பெரும் காயத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றார்.

ஹக்கீமின் தன்னலத்தை மையப்படுத்திய அரசியல் செயல்பாடுகள் காரணமாக திகாமடுல்ல மாவட்டத்தில் இந்த முறை மிகவும் மோசமான சரிவை மு.கா. அங்கு சந்திக்கின்றது.

இருபதற்கு (20) கை உயர்த்தினார் என்பதற்கு ஹரிசுக்குத் தண்டனை. அதே குற்றத்தை செய்த அடுத்தவர்களுக்கு ஹக்கீம் சீட்டுக் கொடுத்தது எந்த நியதியில்? ஆனால் தலைவர் சொல்லித்தான் நாம் இருபதற்கு கை உயர்த்தினோம் என்று அவர்கள் வாக்குமூலம் வேறு கொடுத்திருந்தனர்.

இது என்ன கதை என்ன டீல். இப்படியான அட்டகாசங்களை சமூகமும் மு.கா.ஆதரவாலர்களும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றார்கள்? இது தலைவர் குற்றமல்ல சமூகத்தின் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

Previous Story

மு.கா.வுக்கு பாரத் அருள்சாமி தலைவர் - ஹக்கீம் அதிரடி!   

Next Story

ஹிஸ்புல்லாஹ்வை தோற்கடிக்க ஹக்கீம் வகுத்த வியூகம்!