-நஜீப்-
நன்றி ஞாயிறு தினக்குரல் 03.08.2025
தேர்தல் தொடர்பாக ஆணையாளர் சமன்சிரி ஏக்கநாயக்க இன்னும் நான்கு வருடங்களுக்கு நாட்டில் தேர்தல் கிடையாது என்று தான் தெரிவித்தாகச் சொல்லப்படுகின்ற கருத்தை மறுத்திருந்த செய்தியை நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தோம்.
அதில் மற்றொன்று வாக்களிக்காதோருக்கு தண்டாப் பணம் அறவிடுவது பற்றிய ஒரு கதையும் இருக்கின்றது. இது பற்றி விளக்கம் கேட்டால். அது இப்படித்தான் என அவர் விளக்கம் தந்திருக்கின்றார்.
நாம் மாவட்ட ரீதியில் தேர்தல்கள் தொடர்பான ஆய்வுகள் கலந்துரையாடல்களைச் செய்து வருகின்றோம். அப்படியான ஒரு இடத்தில் ஒரு இளம் முஸ்லிம் யுவதி நமக்கு இந்தக் கருத்தை முன்வைத்திருந்தார்.
வாக்காளர்கள் உரிமைக்காக அரசு கோடிக்கணக்கில் விரயம் செய்ய அதனைத் துஸ்பிரயோகம் செய்வோருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற அவரது ஒரு ஆலோசனைதான் இது.
இவற்றை சுட்டிக் காட்டுகின்ற போது ஊடகங்கள் இதனைத் திரிவுபடுத்தி ஒரு இசுவாக எடுத்துக் கொள்கின்றன என்றார் ஏக்கநாயக்க.