முஸ்லிம் பெண்களை ஏலம் விடும்  இளைஞர் கைது!

முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி அவர்களை ஏலம் விடுவதாகபுல்லிபாய்செயலி உருவாக்கப்பட்டது. அவ்வழக்கில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போன்றுசுல்லி டீல்ஸ்என்ற செயலியை நடத்தி வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் இன்று டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நவீன தொழில்நுட்பங்கள், சமூக ஊடகங்களை பலர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் மதங்களை கொச்சைப்படுத்துவது, சாதி வெறியை தூண்டுவது, போலி செய்திகளை பரப்பி கலவரம் உண்டாக்குவது போன்ற சமூகவிரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதில் பாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலர் அவ்வப்போது சிக்கி சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.


அந்த வகையில் சமீபத்தில் முஸ்லிம் பெண்களை அவமதிக்கும் வகையில் அவர்களை ஏலம் விடும் புல்லி பாய் என்ற செயலியை, இளைஞர்கள் சிலர் இணைந்து உருவாக்கினர். இவ்விவகாரம் சர்ச்சையானதும் அச்செயலி முடக்கப்பட்டு, அதனை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள் விஷால் குமார் ஜா, மயங்க், நீரஜ் மற்றும் உத்தரகண்டைச் சேர்ந்த சுவேதா சிங் என்ற பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் நீரஜ் என்பவருக்குசுல்லி டீல்ஸ்என்ற செயலியை கடந்த ஓராண்டாக நடத்தி வரும் நபருடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அச்செயலியும் முஸ்லிம் பெண்கள் ஏலத்திற்கான போலி செயலி. அதனை உருவாக்கிய ஓம்கரேஷ்வர் என்ற இந்தூர் நகர இளைஞரை டில்லி போலீசார் இன்று (ஜன., 09) கைது செய்தனர்.

கிட்ஹப்எனும் நிரலாக்க தளத்தை பயன்படுத்தி இந்த செயலியை உருவாக்கியுள்ளார். பின்னர் அதில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை திருடி பதிவேற்றி சமூக ஊடகங்களில் செயலியை பரப்பியுள்ளார்.

Previous Story

லண்டனில் கொலை 13 வயது சிறுவன் கைது!

Next Story

மூதூரில் பேருந்து-டிப்பர் விபத்து