கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் 30முதல்35 சதவீதம் அனுர வெற்றிக்கு வாக்களித்திருக்கின்றனர். எண்ணிக்iயில் இது 46000 முதல் 49000 வரை. இப்போது இன்று அனுர வெற்றிபெற்று ஜனாதிபதியாக வந்திருப்பதால் பொதுவாக அவரது கட்சிக்கு மேலும் குறைந்தது 15-20 சதவீதம் ஆதரவு அதிகரித்திருக்கும். இது அரசியல் நியதி.
அந்த எண்ணிக்கை முஸ்லிம் தரப்பிலும் அதிகரிக்குமாக இருந்தால் என்பிபி. யில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்கள் இலகுவாக 70000 வரையிலான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனாலும் அவர்களது செயல்பாடுகளில் நமக்கும் திருப்தி இல்லாத ஒரு நிலை இருப்பதால் இந்த இலக்கை அவர்கள் எட்டுவார்களா? குறைந்து கட்ந்த ஜனாதிபதித் தேர்தலில் கண்டியில் அனுரவுக்குக் கிடைத்த வாக்குகளையாவது இவர்கள் பெற்றுக் கொள்வார்களோ தெரியாது.
எப்படி இருந்தாலும் முஸ்லிம் சமூகம் என்பிபி.க்கு ஆதரவளித்தார்கள் என்பதற்கான அடையாளம் நமது வேட்பாளர்கள் பெறும் வாக்குகளாகத்தான் இருக்கும். எனவே விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிம் சமூகம் இவர்களுக்கு வாக்களித்துத்தான் ஆகவேண்டும். அத்துடன் ஆளும் தரப்பில் நமக்குப் பிரதிநிதித்துவம் இருப்பது கட்டாயம். பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருக்கும் கண்டியில் இதனை நாம் தவற விடக்கூடாது.
இதனையும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் தலைமை வேட்பாளருக்கு (2) ஒரு வாக்கை போட்டுவிட்டு உங்கள் தொகுதியில் இருக்கும் சகோதர வேட்பாளருக்காவது நீங்கள் கட்டாயம் உங்கள் விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும்.
கண்டியில் குறைந்தது என்பிபி.க்கு எட்டு உறுப்பினர்களையாவது வென்றெடுக்க இங்கு வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் துணைபுரிய வேண்டும் என்பது நமது வேண்டுகோளாக இருக்கின்றது.
ஒரு சந்தர்ப்பத்தில் கண்டியில் நான்கு பிரதிநிதித்துவம் இருந்த சந்தர்ப்பங்களும் நமது வரலாற்றில் இருந்திருக்கின்றது.