அமைச்சரவை முஸ்லிம்கள் ஆதங்கம்
-யூசுப் என் யூனுஸ்-
வரலாற்றில் முதல் முறையாக தற்போது 2024 ல் அமைந்திருக்கின்ற ஜேவிபி-என்பிபி. யின் அனுர ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி வாய்ப்புக் கிடைக்காமல் போனது நாட்டில் பேசு பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு விமர்சனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதில் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அனுர விரோதிகளும் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக புகழ் பெற்ற உளவுத்துறை ஆய்வாலர் நிலாம்தீன் தருகின்ற தகவல்களின் படி டாக்டர் சாலிக்கு அமைச்சுக் கொடுக்கப்பட்டது. ஆனால் தனது தனிப்பட்ட வருமானத்துக்கு தான் பெறும் அமைச்சு பாதிப்பாக இருக்கும்.
அனுர தலைமையிலான அரசில் அமைச்சுப் பதவி பெற்றால் எந்த ஒரு வசதி வாய்ப்புக்களும் கிடைக்காது. அமைச்சுப் பெற்றுக் கொள்வததை விட தியாகத்துடன் ஒத்துழைப்புக் கொடுப்பவர்களுக்கு அதனை விட்டுக் கொடுப்பதுதான் பொறுத்தம் என்று டாக்டர் சாலி நினைத்திருக்கக் கூடும்.
அது எப்படிப்போனாலும் இன்னும் இருவருக்கு முஸ்லிம்கள் தரப்பில் உதவி அமைச்சுக்கள் கிடைக்க இருக்கின்றது என்று உறுதி படத் தெரிவிக்கும் உளவுத்துறை ஆய்வாளர் நிலாம்தீன்.
இது தொடர்பாக ஜேவிபி. உயர் மட்டத் தலைவர்களுடன் தான் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பிரதி அமைச்சர்களில் ஒருவராக நிச்சயம் முனீர் முலவ்பர் இருப்பார். அடுத்தவர் கல்முனை ஆதம்பாவா அல்லது மாத்தரை பொறியிலாளர் அர்க்கமாகவும் அது இருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது.
இது தவிர ஒரு கெபினட் அமைச்சு நிச்சயம் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் என்று உறுதி கூறுகின்றார் புகழ் பெற்ற உளவுத்துறை ஆய்வாலர் நிலாம்தீன்.