முற்பகல் பதவியேற்ற அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

இன்று முற்பகல் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை நீதிமன்றில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி அவரை மன்றில் ஆஜராகுமாறும், தாக்கல் செய்யப்பட்டஇரண்டு மனுக்களையும்  அன்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

முற்பகல் பதவியேற்ற அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் | Court Notice To The Sworn Minister In The Morning

நீதிபதிகள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக அமைச்சர் மீது குற்றச்சாட்டு

2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில், பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை தொடர்பாக, குறிப்பாக நீதித்துறை அதிகாரிகள் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முற்பகல் பதவியேற்ற அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் | Court Notice To The Sworn Minister In The Morning

இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சனத் நிஷாந்த எம்.பியை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள், கோரியுள்ளனர்.

Previous Story

பிரிட்டன்  புதிய அமைச்சரவையில் தமிழ் (புத்த மதம்) பெண்ணுக்கு முக்கிய பதவி

Next Story

கோட்டா வரவுக்கு பின்னய அரசியல்!