தேவை ஏற்படும்போது சேவை வழங்க வேண்டும் என்பதை திருகோணமலை மாவட்ட YMMA முன்மாதிரியாக காட்டியுள்ளது.
மியன்மார் நாட்டில் இருந்து படகு மூலம் இலங்கை வந்த அகதிகளை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் YMMA மாவட்ட பணிப்பாளர் எம்.எம்.முக்தார் முஸ்தபா உட்பட அவரது குழுவினர் மற்றவர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் தமது சேவைகளையும் அவர்களது தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்ததை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஒருவர் கஷ்டத்தில் விழும்போது அவர்களை அனுசரித்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றது. அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து தேவைகளையும் குறித்த அமைப்பு மிகவும் ஆர்வத்துடன் முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஜமாலியாவை சேர்ந்த குறித்த இளைஞர்கள் குழு செயற்பட்டு வருவது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இதேபோன்ற இலைஞர் தலைமுறைகளை நமது மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு இலங்கை நாட்டிலும் உருவாக்க வேண்டும்.
அத்துடன் மியன்மார் மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்வதுடன் அவர்களுக்குரிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.