முனியை சந்திக்க குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்ற பேராயர்

கொழும்பு பொரள்ளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முனி என்ற சன் கிறிஸ்டியன் என்ற நபரை, பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) சந்தித்துள்ளார். கொழும்பு தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்று பேராயர் முனியை சந்தித்துள்ளார்.

பேராயருடன் அங்கு சென்றிருந்த கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிறிஸ்சாந்த பெர்னாண்டோ ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

இந்த கைக்குண்டு காரணமாக தேவாலயத்தில் நடக்கவிருந்த மிகப் பெரிய அழிவு முனி என்பவரால் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தொடர்பில் பேராயர் விசேட மரியாதையை வைத்துள்ளார்.

ஏனைய மூன்று பேரை போல் முனியையும் பொலிஸார் விடுதலை செய்வார்கள் என நம்புகிறோம். முனி சில தினங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்படுவார் என பேராயர் எதிர்பார்த்திருந்தார்.

எதிர்பார்த்தப்படி அவர் விடுதலை செய்யப்படாது குறித்து அனைவரும் கவலையில் உள்ளனர். அத்துடன் குறித்த கைக்குண்டு எந்த நபரோ தனிப்பட்ட காரணத்திற்காக வைக்கவில்லை. அது சூழ்ச்சிகரமான சம்பவமாக நாங்கள் பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Previous Story

நீதி அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும்! 

Next Story

உ.பி.தேர்தல்: இந்திய அரசியல்