முதல் படத்தை ஒப்பந்தம் செய்த மோனாலிசா.!

கும்பமேளாவால் கிடைக்கும் வாய்ப்புகள்

மகா கும்பமேளாவில் வைரலாகும் மோனாலிசா என்ற சிறுமி தனது முதல் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.

படத்தில் ஒப்பந்தம்

Viral Garlands Seller Mona Lisa Forced to Return Home for Family Safety. Image: Twitter

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

monalisa

திரை நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மணிப்பூரில் நடந்த ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட டைரி ஆஃப் மணிப்பூர் திரைப்படத்தில் மோனாலிசாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இதில் மோனாலிசா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

முதல் படத்தை ஒப்பந்தம் செய்துள்ள மோனாலிசா.., கும்பமேளாவால் கிடைக்கும் வாய்ப்புகள் | Mahakumbh Monalisa Who Has Signed Her First Film

மத்திய பிரதேச மாநிலம் மகேஷ்வரில் உள்ள மோனாலிசா வீட்டிற்கு நேரில் சென்ற இயக்குனர் சனோஜ் மிஸ்ரா அவரை சந்தித்துள்ளார். மோனாலிசா தனது பாத்திரத்திற்காக கடினமாக உழைக்க அவர் கூறியுள்ளார்.

The Burden of Unwanted Fame

இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கி மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும். ரூ. 20 கோடி (SL.ரூ.68 கோடி)  பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

 நாமல் ராஜபக்ச குற்றவாளி.. நீதிமன்றம்  அதிரடி!

Next Story

அதிசயத்தின் உச்சம்! வெடித்து ஓடும் ரத்த நீர்வீழ்ச்சி!