உலக கச்சா எண்ணெய் சப்ளையில் 5ல் ஒரு பங்கு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியில் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதற்கிடையே ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களிடம் சுங்க கட்டணத்தை வசூலிக்கும் பிராசஸை ஈரான் தொடங்கியுள்ளது.
இதற்காக விரிவான ஒரு திட்டத்தையும் ஈரான் போட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.! உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி இப்போது ஒரு புதிய ‘நிழல் யுத்தம்’ தொடங்கியுள்ளது.
வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் விலகாத நிலையில், அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் கண்டறிக இந்திய திரைப்படங்கள் தமிழ்நாடு உணவு இந்திய கலாச்சாரம் ஹார்முஸ் ஏற்கனவே ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்க கட்டணத்தை வசூலிப்போம் என ஈரான் கூறியிருந்த நிலையில், இப்போது அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அதன்படி ‘பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ள ஈரான், அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலும் குறிப்பிட்ட தொகையைச் சுங்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது..
இது மட்டுமின்றி, தங்களைப் பற்றிய 40க்கும் மேற்பட்ட தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே செல்வதால், ஈரானின் இந்த அதிரடி நகர்வு கச்சா எண்ணெய் விலையை மேலும் எகிற வைத்துள்ளது.
சுங்க கட்டணம் ஈரானின் இந்த புதிய விதிகளின்படி, கப்பல்கள் தங்களின் உரிமையாளர்கள், இன்சூரன்ஸ் விவரங்கள், மாலுமிகளின் குடியுரிமை மற்றும் பயணப் பாதை குறித்த தகவல்களை ஈரான் அறிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதில் ஏதேனும் தவறான தகவல் இருந்தால், அந்தக் கப்பல்கள் சிறைபிடிக்கப்படும் அல்லது திருப்பி அனுப்பப்படும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ஆதரிக்கும் நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடப்பதில் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என ஈரான் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளது.





