முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்தல்; கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது எழுந்த பிரச்சினைகள் காரணமாக அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக்குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் நீதிமன்ற தீர்ப்புகளையும் கருத்திற்கொண்டு இந்த புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2023ஆம் ஆண்டு முதல் அடுத்து வரும் வருடங்களில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது திருத்தப்பட்ட சுற்றறிக்கை அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.

ன்றனர்.

Previous Story

போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து வெளியேற்றுகிறது குவைத்

Next Story

எதிர்காலம் மிகவும் ஆபத்தானது! சாப்பிடாமல் உயிரிழக்கும் அபாயம்!