முட்டிக் குனியும் கட்டளை!

-நஜீப்-

சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் சேலைகளை தூக்கி எறிந்து விட்டு இலகுவான ஆடைகளுடன் பாடசாலைக்குப் போனார்கள். இது சமூகத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. நாடாளுமன்றத்திலும் இந்தக் கதை பேசப்பட்டது.

இது பற்றி ஆராய்ந்து பார்த்த போது அரசாங்க ஊழியர்கள் தாம் விரும்பிய இலகு ஆடைகளுடன் பணி இடங்களில் வேலைக்குப் போகலாம் என்று சுற்று நிரூபமொன்றை வெளியிட்டது. இதற்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதால்தான் பெண் ஆசிரியர்கள் சிலர் இலகு ஆடைகளுடன் கடமைக்குப் போனார்கள்.

அப்போதுதான் ஆட்சியாளருக்கு தமது முடால்தனம் தெரிய வந்தது. கதை நாடாளுமன்றம் வந்த போது அமைச்சர் சுசில் பிரேம்ஜயந் அது ஆசிரியர்கள் தவறு கிடையாது, சுற்று நிரூபம் வெளியிட்டவர்களின் முட்டால்தனம் என்று குறிப்பிட்டார்.

டொன் பிரசாத் என்ற  இனவாதி இதற்கு இப்படி ஒரு காரணத்தை சொல்லி இருந்தார். பெரும்பாலான பெண் ஆசிரியர்களுக்கு பாடசாலைக்கு வரும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் கள்ளத் தொடர்புகள் இருக்கின்றது.

அதனால் வசதிக்காகத்தான் அவர்கள் சாரியை தூக்கி எறிந்து விட்டார்கள் என்று விளக்கம் சொல்லி இருக்கின்றார். எப்படி இருக்கின்றது. அவர் அறிவு மட்டம்!

நன்றி:27.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரொனால்டோவை மிரளவைத்த கானா!

Next Story

கொழும்பில் அவசரமாக கூடிய தமிழ் கட்சிகள்:எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்