முகாபே மஹிந்த சோடிகள்!

நஜீப்

நன்றி 21.09.2025 ஞாயிறு தினக்குரல்

சிம்பாபே ஜனாதிபதி ரொபட் முகாபே நெடுங்காலமாக அதிகாரத்தை தனது பிடியில் வைத்திருந்தார். இதனால் நாட்டில் ஒரு அராஜக நிலையும் குடிமக்களின் கடுமையான விமர்சனங்களும் அங்கு தோன்றி இருந்தது.

Death of Robert Mugabe Death of Robert Mugabe

இந்தப் பின்னணியில் ஒரு பத்திரிகையாளர் முகாபேயிடம் நீங்கள் எப்போது அரசியலில் இருந்து வெளியேறப் போகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பிய போது ஏன் அப்படிக் கேட்கின்றீர்கள் மக்கள் எங்காவது போகப்போகின்றார்களா என்று பத்திரிகையாளரிடம் முகாபே திருப்பிக் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

இதிலிருந்து அவர் ஒதுங்கப் போவதில்லை என்பது உறுதியானது. அதே போலத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை.

புதிய அலை ஒன்று விரைவில் வரும் என்று நம்பிக்கை வெளியிட்டதுடன் அதன் மூலம் முகாபே பாணியில் அரசுக்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றார்.

மேலும்  மீண்டும் கொழும்புக்கு திருப்பி வருவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து கொண்டு வருகின்றார்.

Previous Story

Sri Lanka vs Bangladesh, Super 4- 20.09.2025

Next Story

රනිල් නීචයා හුන්ඩුවකට තුන්සීයක් එකතු කරලා කියපු බොරුවලට උත්තර