இனி இந்தியாவை நீங்கள் நம்ப வேண்டாம். அவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இந்தியா செய்யும் உதவியை நாங்கள் செய்கிறோம். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று துருக்கி நாட்டின் அமைச்சர், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் துருக்கியுடன் உறவை பலப்படுத்தும் முடிவை வங்கதேசம் எடுத்துள்ளதோடு நம் நாட்டின் முதுகில் குத்த அவர் தயாராகி உள்ளார். இதன் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நமது ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி 1971 ல் புதிதாக உருவாக்கிய நாடுவங்கதேசம்.
இதனால் தான் தொடர்ந்து வங்கதேசத்துக்கு நம் நாடு கருணை காட்டி உதவி செய்து வருகிறது. இதற்கு விசுவாசமாக இருந்தவர் ஷேக் ஹசீனா. ஒருபோதும் நம்நாட்டை எதிர்த்தது இல்லை. நம் நாட்டுடன் தொடர்ந்து நல்லுறவில் இருந்தார். ஆனால் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
அன்று முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகிவிட்டது. இதற்கு அங்குள்ள இடைக்கால அரசு தான் காரணம்.
பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கி! இந்தியாவுக்கும் சிக்கல் இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டார். வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸ் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கியிருந்தார்.
வங்கதேச வன்முறை, ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து அவர் அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கிறார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் நம் நாட்டு வீரர்களை அந்த நாட்டு படைகள் சீண்டி வருகின்றன.
உருவாகும் ஒட்டோமன் பேரரசு? அதேபோல் பாகிஸ்தான் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்கும் நாடுகளை தேடிப்பிடித்து நெருக்கம் காட்டி வருகிறார் இந்த முகமது யூனுஸ். பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடாக வங்கதேசம் உருவாக இந்திய நாடு தான் உதவி செய்தது. இந்திய நாட்டு ராணுவம் மட்டும் இல்லையென்றால் வங்கதேசம் என்ற நாடே இருக்காது.
ஆனால் அந்த நன்றி விசுவாசத்தை மறந்து முகமது யூனுஸ் செயல்படுகிறார். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில்உள்ள ஜமுனா விருந்தினர் மாளிகையில் துருக்கி நாட்டின் வர்த்தக அமைச்சர் ஓமர் போலட், முகமது யூனுஸை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது முகமது யூனுஸ், ‛‛உலகில் அதிக மக்கள் தொகை நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் 8 வது இடத்தில் உள்ளது. இங்குள்ள இளைஞர்களை துருக்கி நாடு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்காக துருக்கி அதிக முதலீடுகளை வங்கதேசத்தில் செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
துருக்கி தான் தற்போது டெக்னாலஜியில் முன்னிலையில் உள்ளது. துருக்கி நாட்டின் நவீன தொழில்நுட்பங்களை வங்கதேசத்தின் பாதுகாப்பு துறையை வழங்க வேண்டும். அதோடு ராணுவ துறை சார்ந்த நிறுவனங்களை வங்கதேசத்தில் நிறுவ வேண்டும். உங்களுக்காக வங்கதேசம் என்ன வேண்டுமானாலும் செய்யும்’’ என்று அடிபணிந்தார்.
இதற்கு துருக்கி நாட்டின் வர்த்தக அமைச்சர் ஓமர் போலட், ‛‛வங்கதேசத்தின் இறக்குமதி என்பது இந்தியாவை சார்ந்து உள்ளது. இனி கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம். இறக்குமதி சார்ந்த விஷயங்களில் இந்தியாவின் ரோலை நாங்கள் ஏற்கிறோம். அதேபோல் பொருளாதாரம் உள்பட பிற துறைகளிலும் நாங்கள் உதவி செய்கிறோம்’’ என்று கூறினார்.
தற்போது வங்கதேசம் அரிசி உள்பட உணவு தானியங்களுக்கு இந்தியாவை தான் சார்ந்து உள்ளது. அதேபோல் வங்கதேசம் ஜவுளி துறையில் முன்னிலையில் உள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்களான பருத்தி உள்ளிட்டவற்றை நம் நாடு தான் அதிகம் வழங்குகிறது.
கடந்த 2023ம் ஆண்டில் வங்கதேசத்திடம் இருந்து துருக்கிக்கு 581 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேபோல் துருக்கியிடம் இருந்து வங்கதேசம் 424 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இறக்குமதி செய்தது. அதேபோல் தற்போதைய சூழலில் துருக்கி நாட்டின் நிறுவனங்கள் வங்கதேசத்தில் செயல்பட்டு வருகின்றன.
ஆயத்த ஆடை, கெமிக்கல்ஸ், இன்ஜினியரிங், கட்டுமானம், எனர்ஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 20 துருக்கி நிறுவனங்கள் வங்கதேசத்தில் உள்ளன. குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் துருக்கி நாட்டின் எல்பிஜி கம்பெனியான AYGAZ, குளிர்பான நிறுவனமான Coca – Cola Icecek, ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனம் ARCILIK உள்ளிட்டவை துருக்கி நாட்டு நிறுவனங்களாகும்.
இந்தியாவுக்கு எதிராக பெரிய சதி..? பாகிஸ்தான் மீதான காதலால் துருக்கி ரகசிய திட்டம்! தூள்தூளாக போகுதே இன்னொரு விஷயம் என்னவென்றால் துருக்கி நாடு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. பாகிஸ்தானுடன் இணக்கமாக செல்வதோடு, அந்த நாட்டுக்கு தேவையான உதவிகளை துருக்கி செய்து வருகிறது.
இப்போது வங்கதேசம் நம்முடன் மோதும் சூழலில் துருக்கி அந்த நாட்டையும் அரவணைக்க நினைக்கிறது. ஏற்கனவே துருக்கி நாட்டின் பயக்டர் டிபி 2 வகை ட்ரோன்களை வங்கதேசம் பயன்படுத்தி வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ட்ரோனை வங்கதேசம் நம் நாட்டு எல்லையான கோழிக்கழுத்து பகுதியில் பறக்கவிட்டு உளவு பார்க்கிறது.
கடந்த 2010ம் ஆண்டில் இருந்து துருக்கி நாட்டிடம் இருந்து 15 வகையான ராணுவ தளவாட பொருட்களை வங்கதேசம் இறக்குமதி செய்துள்ளது. அதோடு துருக்கியிடம் இருந்து அதிக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்தில் உள்ளது.
வங்கதேசத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள பயக்டர் டிபி 2 வகை ட்ரோன், Otokar Kobra II IMV, Otokar Kobra II AFVs வாகனங்கள், MARP, RN 94Armored Ambulance, TRG 300 Tiger MlRS, TRG – 230 Missiles உள்ளிட்டவை துருக்கி நாட்டில் இருந்து வங்கதேசம் வாங்கியது தான். இதற்கு அடுத்தப்படியாக 26 Tulpar Light Tanks-களை துருக்கியிடம் இருந்து வாங்க வங்கதேசம் முடிவ செய்துள்ளது.
இந்த டேங்குகள் என்பது நவீன வசதி கொண்டது. சகதி, சதுப்பு நிலத்தில் இந்த டேங்குகளால் பயணிக்க முடியும். இப்படியாக வங்கதேசம் – துருக்கியுடன் கைகோர்த்து நம் நாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி துருக்கி தற்போது ஆசியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறது.
அந்த நாட்டை பொறுத்தவரை ராணுவம், பாதுகாப்பு துறையில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன. இதனை நம் நாட்டுக்கு வழங்கமாட்டேன் என்று ஏற்கனவே துருக்கி கூறி உள்ள நிலையில் பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு வழங்குவதோடு, அந்த நாடுகளின் ராணுவத்துக்கு உதவி செய்து வருகிறது. இதன்மூலம் நாட்டில் இருந்து தூரம் இருக்கும் துருக்கி பாகிஸ்தான், வங்கதேசம் வழியாக நம்மை சீண்டி பார்க்கிறது.
இது இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அதோடு துருக்கி, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் அதிகரிக்கும் பட்சத்தில் நாடும் பாவம் புண்ணியம் பார்க்காமல் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடும்.
அதோடு பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒப்பிடும்போது இந்திய நாட்டின் படை பலம் என்பது பலமடங்கு அதிகம். எளிதாக இருநாடுகளையும் நம் நாட்டால் வீழ்த்த முடியும். இருப்பினும் கூட அலட்சியம் காட்டாமல் அண்டை நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்தவரை மிகவும் அலர்ட்டாக இருக்க வேண்டிய கட்டாயம்,