சல்மான் கான் அதிரடி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் இப்போது சிக்கந்தர் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், கிஷோர் உள்ளிட்டோரும் படத்தில் முக்கியமான ரோல்களை ஏற்றிருக்கிறார்கள்.
கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கையில் சல்மானின் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிக்கந்தர் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் சல்மான் கான் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் என அழைக்கப்படுபவர் சல்மான் கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்களாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் அவர் இப்போதும் எனர்ஜி குறையாமல் திரையில் வருவதை ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.
கடந்த 1988ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான சல்மான் கான் 90களில் மிகப்பெரிய ரவுண்டு வந்தார். அவருக்கு போட்டியாக ஷாருக் கான், கிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் சமகாலத்தில் இருந்தாலும் அதில் இப்போதுவரை நிலைத்திருக்கும் சல்மான் கானுக்கு இன்றுவரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
திருமணம் இல்லை
சல்மானுக்கு இப்போது 57 வயது ஆகிறது. ஆனால் இன்றுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்தார். அந்தக் காதல் பிரிவில் முடிந்தது. அந்தக் காதல் பிரிவுக்கு முழுக்க முழுக்க சல்மானின் டாக்சிக் குணம்தான் காரணம் என்று இன்றுவரை பலரால் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பலருடன் இணைத்து சல்மான் கான் பேசப்பட்டாலும் அவருக்கு பெண்கள் மத்தியில் இன்னமும் ஒரு க்ரஷ் இருக்கிறது.
சல்மான் கான் படங்கள்
சல்மான் கான் ஹிந்தியில் நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் மற்றும் டைகர் 3 உள்ளிட்ட படங்கள் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை எதுவும் தரவில்லை. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி எப்படியாவது ஒரு மெகா ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்பதிலும் சல்மான் உச்சக்கட்ட தீவிரத்தில் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துவருகின்றன.
சல்மான் கான்
இப்படிப்பட்ட சூழலில்தான் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்திருக்கிறார் அவர். படத்துக்கு சிக்கந்தர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இதில் சல்மானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
மேலும் சத்யராஜ், கிஷோர் உள்ளிட்டோரும் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முருகதாஸும் நீண்ட நாட்கள் கழித்து ஹிந்தியில் இந்தப் படத்தை இயக்குவதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
சல்மான் கான் பேச்சு:
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. அப்போது சல்மானிடம் அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், “ராஷ்மிகா மந்தனாவுக்கும் எனக்கும் இடையே 31 வயது வித்தியாசம் இருக்கிறது என்று பேசுகிறார்கள். வயது வித்தியாசத்தில் ஹீரோயினுக்கோ அவரது அப்பாவுக்கோ பிரச்னை இல்லை.
அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்னை வந்தது. ராஷ்மிகாவுக்கு திருமணமாகி அவருக்கு மகள் பிறந்தால்; ராஷ்மிகாவின் சம்மதத்தை பெற்று அவரது மகளுடனும் நடிப்பேன்” என்றார்.
அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.