மீண்டும் குவைத் பிரதமரானார் ஷேக் அஹமது

எண்ணெய் நாட்டில் எரியும் அரசியல் தீ! குழப்பங்கள் குறையுமா? வளைகுடாவின் மற்ற நாடுகளை விட நாடாளுமன்றத்திற்கு குவைத் அதிக அதிகாரத்தை கொடுத்து இருக்கிறது.குவைத் சிட்டி: குவைத் நாட்டின் பிரதமராக ஷேக் அஹமது நவாஃப் அல் சபாவை மீண்டும் நியமனம் செய்து இருக்கிறார் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் சபா. குவைத்தின் புதிய அமைச்சரவையை ஷேக் அஹமது நவாஃப் தேர்வு செய்துகொள்ளுபடி அவர் அ அறிவுறுத்தி இருக்கிறார்.

எண்ணெய் வளம் நிறைந்த செழிப்பான அரபு நாடுகளின் வரிசையில் தவிர்க்க முடியாத இடம்பிடித்து இருப்பது குவைத். அரபு நாடுகள் மட்டுமின்றி உலகில் உள்ள நாணயங்களிலேயே குவைத் நாட்டின் நாணய மதிப்புதான் உயர்ந்தது.

இப்படி செல்வம் கொழிக்கும் நாடான குவைத்தில் சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்று மன்னராட்சி நடைபெற்று வந்தாலும் அந்த நாட்டிற்கு என நாடாளுமன்றமும், பிரதமர் மற்றும் அமைச்சர்களும் உள்ளனர். அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யானுடன் தீவிர ஆலோசனை குவைத் நாடாளுமன்றம் நாட்டின் பல்வேறு திட்டங்கள் நாடாளுமன்றத்தில் கூடியே முடிவெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக அந்நாட்டு அரசுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

இதன் காரணமாக நாடாளுமன்றம் அமைச்சரவை கலைக்கப்பட்டு பிரதமர் ஷேக் அஹமது பதவி விலகுவதாக அறிவித்தார். நிதி சீர்திருத்தம் இதனால் ஒரு மாதத்துக்கும் மேலாக அந்நாட்டு நாடாளுமன்றம் செயல்படாமல் இருந்து வந்தது. நாடாளுமன்றம் செயல்படாத காரணத்தால், சர்வதேச சந்தைகளை தட்டிக்கேட்கும் கடன் சட்டம் உட்பட பல்வேறு நிதி சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் சிக்கல் நிலவியது.

இதற்கு ஒரு தீர்வு காண குவைத் பட்டத்து இளவரசர் முடிவு செய்தார் மீண்டும் அதே பிரதமர் இந்த நிலையில்தான் மீண்டும் ஷேக் அஹமதுவை பிரதமராக அறிவித்துள்ளார் அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் சபா. குவைத் அமீர் எனப்படும் தலைவரின் பெரும்பான்மையான பணிகளை தற்போது பொறுப்பேற்று செய்து வரும் ஷேக் மெஷால், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவெடுத்தார். அரசுக்கு அழுத்தம் அந்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து குவைத் மக்களின் தனிப்பட்ட கடன்களை அரசு வாங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் ஆட்சியமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனால் மீண்டும் பதற்றங்கள் எழுந்த நிலையில், 2 அமைச்சர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். நாடாளுமன்றம் கலைப்பு இந்த நிலையில் குவைத் நாடாளுமன்றம் ஜனவரி மாதம் மீண்டும் ராஜினாமா செய்தது.

அதை தொடர்ந்து அந்நாட்டு சில அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டனர். வளைகுடாவின் மற்ற நாடுகளை விட நாடாளுமன்றத்திற்கு குவைத் அதிக அதிகாரத்தை கொடுத்து இருப்பதால் அது இல்லாமல் மன்னராட்சியால் செயல்படுவது கடினம். நிலையற்ற அரசியல் சூழல் வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடாக குவைத் இருந்தாலும் அந்நாட்டில் அடிக்கடி ஏற்படும் அரசியல் குழப்பங்கள், மாற்றங்கள் மற்றும் நிலையற்ற தன்மையின் காரணத்தால் அந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமான பெட்ரோல், டீசல் வர்த்தகத்தை பாதிக்கும் என்பதையும், காலத்திற்கு ஏற்ற சீர்திருத்தங்களை செய்வது இடையூறு ஏற்படும் என்பதையும் அந்நாட்டு பட்டத்து இளவரசர் உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

Previous Story

தேர்தல் நடக்காது!

Next Story

சீனா: ராணுவத்துடன் பட்ஜெட் செலவினத்தை விவாதிக்கும் அரசு