நஜீப்
நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல்
சந்திரிகா-விஜே, இவர்களுக்கு விமுக்தி-யசோதர என இரு பிள்ளைகள். இன்று நாட்டில் அணுராவுக்கு எதிரான ஒரு மாற்று அணி அவசியம்.
ஆனால் களத்திள் நிற்பவர்கள் அனைவரும்போல கொள்ளையர்கள்-ஊழல் பேர்வழிகள் என்பதால் அவர்களால் மக்கள் ஆதரவை திரட்டுவது சிரமம்.

எனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை சிலர் அனுகி இந்த நிலமையை விளக்கி விமுக்தியை (விடுதலை) களத்துக்குக் கொண்டு வந்தால் நல்ல வாய்ப்பு என்றார்கள்.
விமுக்தி லண்டனிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு வந்திருந்த போது இதனை சந்திரிகா சொல்ல, எடுத்த எடுப்பிலே அதனை அவர் நிராகரித்து விட்டார்.
சந்திரிகா முன்பும் இந்த வேண்டுகோளை விடுக்க அவர் நிராகரித்திருந்தார். விஜே பற்றி நினைவு கூரும் போது நான் அவர் நடிகர் என்பதால் காதலிக்கவில்லை.
அவரின் உடற்கட்டு எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் மனதைப் பறிகொடுத்தேன் என்றார்.





