‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில்  சவுதி அழகி!

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்த நாட்டின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுதின் ஆட்சியின் கீழ் தங்களது பாரம்பரிய வழக்கத்தை கைவிடுத்த நகர்வில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

                                                                                         ரூமி அல்கஹ்தானி

27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் தான் பங்கேற்பது குறித்த தகவலை திங்கட்கிழமை அன்று இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது” என அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதனை அந்த நாட்டின் செய்தி ஊடக நிறுவனமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

உலக அளவில் நடைபெற்று வரும் அழகிப் போட்டிகளில் ரூமி அல்கஹ்தானி பங்கேற்று வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான அழகிப் போட்டியில் பங்கேற்று இருந்தார். உள்நாட்டு அளவில் நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் முதல் இடத்தை அவர் பிடித்துள்ளார்.

Who Is Rumy Alqahtani? Everything You Need To Know About The Saudi Arabian Contestant At The Miss Universe 2024

ரியாத்தில் பிறந்த அவர் தன் நாட்டின் சார்பில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். அவரை இன்ஸ்டாகிராம் தளத்தில் பத்து லட்சம் பெறும், எக்ஸ் தளத்தில் ஆயிரக்கணக்கானவர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர். மிஸ் யுனிவர்ஸ் 2023-ம் ஆண்டுக்கான பட்டத்தை நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு கல்லடி, கசையடி!

Next Story

பாததும்பற ஐதேக. வலய அமைப்பாளராக M.H.Mமுபாரக் நியமனம்