நஜீப்
04.01.2026 ஞாயிறு தினக்குரல்
நாட்டில் அரசை விமர்சிக்க மக்கள் இருப்பார்கள். அந்த எண்ணிக்கையை நாம் ஒரு நாற்பது (40) சதவீதம் என்று கணிக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலிலும் அந்த எண்ணிக்கையில்தான் வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் அளும்தரப்பு தொன்னூறு சதவீத வட்டாரங்களை வெற்றி கொண்டாலும் இந்தத்தேர்தல் முறையால் சில இடங்களில் தெளிவான பெரும்பான்மை சமயவில்லை. அதனால் சபைகளை அமைக்க ஆளும் எதிரணி என இருதரப்பும் கூட்டணி போட்டார்கள்.
வரவு செலவில் அங்குதான் இழுபறிநிலை. எனவே நாட்டில் அரசை விமர்சிக்க ஒரு நாற்பது வீதமானவர்கள் நாட்டில் இருப்பது இயல்பானதே. அப்படித்தான் ஊடக செயல்பாடுகளும் இருக்கும்.
ஒட்டுமொத்த எதிரணியும் மிகவும் பலயீனமாக இருக்கின்றது. அவர்களால் அரசுக்கு ஆபத்து கிடையாது. ஆனால் நிருவாக சேவையில்தான் மிகப்பெரிய அரசு விரேத செயல்கள் நடக்கின்றன.
அனுர பதவிக்கு வந்ததால் இவர்களின் குறுக்குவழி வருமானங்கள் தடைப்பட்டிருக்கின்றது. நிருவாகத்தில் இவர்கள் மிகச் சிரிய தொகையானாலும் ஆபத்தானவர்கள்.





