மாணவர்களுடன் ஒரு நிமிடம்

எனது கல்வித்தாய் க/ஜாமியுல் அஸ்ஹர் தேசியப் பாடசாலை தனது நூறாவது வயதை அடைந்து ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறாள். கல்வித்தாயின் ஒளிக்கதிர்களை உலகறியச் செய்யும் சஞ்சிகையில் எனது ஆக்கத்தை எழுத்து வடிவில் பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்.

அன்பான மாணவர்களே !

  • க.பொ.த சாதாரணத்தரப் பரீட்சையில் (O/L) சித்தியடைந்த பல மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பிரிவில் எப்பாடங்களை தெரிவு செய்வது எத்துறையில் பயணிப்பது என்ற மனக் குழப்பத்தில் தடுமாறும் நிலை, தவிக்கும் நிலை காலம் தோறும் நடைபெற்று வரும் நிகழ்வாகும்.
  • எனது இப்பதிவு உயர்த்தர விஞ்ஞானத்துறையை விளக்கும் பதிவாகவும், மிக முக்கியமாக உயர்த்தர விவசாய விஞ்ஞானப் பிரிவினை விளக்கும் பதிவாக அமையும் என்பதில் ஐயமில்லை.

  • உயர்த்தர விஞ்ஞானப் பிரிவினை பிரதானமாக மூன்று வகையாக பிரிக்கலாம்.
  1. உயிரியல் விஞ்ஞானப் பிரிவு
  2. விவசாய விஞ்ஞானப் பிரிவு
  3. கணிதப் பிரிவு
  • உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அடங்கும் பாடங்கள்.

 

  • 1.உயிரியல்-                   Biology
  • 2.இரசாயனவியல் –   Chemistry
  • 3.பௌதிகவியல் –       Physics
  1. Biology BSc degree course
  • தனது எதிர்க்காலத்தை மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில் அமைத்துக் கொள்ள ஆசைப்படும் மாணவர்கள் பிரதானமாக உயிரியல் விஞ்ஞானத்துறையை தேர்ந்தெடுத்தல் வேண்டும். இதில் சித்தியடையும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பின்வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
  1. மருத்துவம்
  2. விலங்கு மருத்துவம்
  3. தாதியியல் துறை
  4. மருந்தகவியல் துறை
  5. மருத்துவ ஆய்வுகூட துறை
  6. ஆயர்வேத மருத்துவம்
  7. யுனானி மருத்துவம்
  8. சித்த மருத்துவம்
  9. ஊடுகதிர்ப்படமெடுப்பு துறை

போன்ற துறைகளுக்கு பிரதானமாக விண்ணப்பிக்க முடியும்.

 

  • மருத்துவ துறையை பிரதானமாக கொள்ளாத மாணவர்கள் மேலும் விஞ்ஞானத்துறையில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையுள்ள மாணவர்கள் இலகுவாக சித்தியடையவும், மிக இலகுவாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறவும், விவசாய விஞ்ஞானப் பிரிவினை தெரிவு செய்து கற்பதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என்பதே எனது வழிக்காட்டல் ஆகும்.
  • How to Study at UTCAN
  • விவசாய விஞ்ஞானப்பிரிவில் அடங்கும் பாடங்கள்.
  1. உயிரியல் – Biology
  2. இரசாயனவியல் – Chemistry
  3. விவசாய விஞ்ஞானம் – Agriculture science
  • உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கற்கும் அதிகமான தமிழ் மொழி மூல மாணவர்கள் அறியாத துறை ஒன்றாகவே இவ் விவசாய விஞ்ஞானப் பிரிவு காணப்படுகின்றது. இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது பல்கலைக்கழக கனவை இழக்கின்றனர்.
  • தமது எதிர்காலத்தை விவசாயத்துறையில், ஆராய்ச்சித் துறையில், மரபணுத்துறையில் உயிர்த் தொழில் நுட்பத்துறையில் அமைத்துக்கொள்ள ஆசைப்படும் மாணவர்களுக்கு பொருத்தமானதும், சிறந்ததுமான ஒரே துறை விவசாய விஞ்ஞானப் பிரிவாகும்.
  • அது மட்டுமன்றி பலமுறை மருத்துவத்துறைக்கு (Medicine) தெரிவாவதற்கு முயற்சித்தும், பலணில்லாத மாணவர்கள் தமது நேரத்தையும், காலத்தையும் வீணாக்காமல், விவசாய விஞ்ஞானப்பிரிவைத் தெரிவு செய்து கற்றல் பல்கலைக்கழக வாய்ப்பையும் சிறந்த எதிர்காலத்தையும் அமைத்துக் கொள்ளலாம்.
  • விவசாய விஞ்ஞானப்பிரிவில் சித்தியடையும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் அதிகமான துறைகளுக்கு விண்ணபிக்க முடியும். மாணவர்களுக்கு இதனை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் ‘பல்கலைக்கழக அனுமதிக்கான புத்தகத்தில்’ தெளிவாக அவதானிக்கலாம்.
  • மாணவர்கள் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் விவசாய விஞ்ஞானப்பிரிவில் கல்விக்கற்க சித்தியடைந்தால் எஎவ்வெத்துறைகளுக்கெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதனை பட்டியலிடுகின்றேன்.fasea-hm-sld-3
  1. விவசாய தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவம்.
  2. விவசாயம்
  3. உணவு விஞ்ஞானமும், போசாக்கும்
  4. உயிரியல் விஞ்ஞானம்
  5. பிரயோக விஞ்ஞானம்
  6. சுகாதார விருத்தி
  7. சூழல் முகாமைத்துவம்
  8. விலங்கு விஞ்ஞானம்
  9. உணவு உற்பத்தி தொழில்நுட்பம்
  10. விவசாய வள முகாமைத்துவம்
  11. விவசாய வியாபார முகாமைத்துவம்
  12. பசுமைத் தொழிநுட்பம்
  13. ஏற்றுமதி விவசாயம்
  14. நீர்வாழ் வள தொழில்நுட்பம்
  • இவ் அனைத்து துறைகளும் விவசாய விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்காக பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் துறைகளாகும். விவசாய விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தியடையும் மாணவர்களுக்கு மேற்கூறப்பட்ட அனைத்து துறைகளுக்கும் விண்ணப்பிக்க முடியும்.
  • அன்பான மாணவர்களே விவசாய விஞ்ஞானப் பிரிவினைத் தெரிவு செய்து கற்று உங்கள் பல்கலைக்கழக கனவினை நனவாக்கி உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்க வாழ்த்துக்கள்.

நன்றி !

M.IRSHAD KAMAL

#MSc(Env)(Rd)

#BSC(Hons)Agr (second upper division)

#Dip. In.A.H(merit)

#Dip .in.B.M(merit)

#Assistant Researcher (under professor university)

#Lecturer =ccas campus (Agriculture unit)

Irshad Kamal

  • உடதலவின்ன மடிகே மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட தரம் ஒன்று முதல் க.பொ.த சாதாரணம் தரம் வரை க/ஜாமியுல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கல்விக் கற்று (உடதலவின்ன மடிகே) பின் உயர்த்தர விவசாய விஞ்ஞானப்பிரிவினை சேர்த்தெடுத்து அதனைக் கற்பதற்காக உக்குவலை அஜ்மீர் தேசிய பாடசாலை மற்றும் மாத்தளை ஸாஹிரா தேசிய பாடசாலையில் கற்று பல்கலைக்கழக விவசாய விஞ்ஞானத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.

தற்பொழுது  சூழலியல் விஞ்ஞானத்துறையில் M.Sc  பயின்று வருகின்றார்.

தனது பல்கலைக்கழக ‘கழிவு முகாமைத்துவம் தொடர்பான’ சிறந்த ஆராய்ச்சிக்காக ‘இளம் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்’ எனும் விருதினை, முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சரும், வட மத்திய மாகாண ஆளுநருமான கௌரவ சரத் ஏக்கனாயக்கவினால் 2019.02.18 ம் திகதி வழங்கப்பட்டு கெரவிக்கப்பட்டார்.

  • தற்பொழுது பேராசிரியரின் உதவி ஆராய்ச்சியாளராகவும், தனியார் பல்கலைக்கழக விவசாய விஞ்ஞானப்பிரிவு விரிவுரையாளராகவும் (CCAS Campus) பணியாற்றி வருகின்றார்.
  • ஆராய்ச்சித்துறை மூலம் மட்டுமன்றி தனது எழுத்து துறை மூலமும் விஞ்ஞானத்தை வளர்த்தும் இவர் மாணவர்களுக்காக மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். அவையாவன :

1. மனித உடற் தொகுதி (210 mcq)

2. வியத்தகு விஞ்ஞானத்தின் வினாவுக்கு விடை(500 tpdh 500 tpil)

3. விஞ்ஞான வினாத்தாள் பயிற்சி நூல் (200 mcq 200 structure, Essay)

 

Previous Story

எர்துவானே மீண்டும் அதிபர்

Next Story

மகனின் குழந்தையை தானே பெற்றெடுத்த தாய்