மாணவர்களின் தரவுகள் சேகரிக்கும் அரசாங்கம்

மாணவர்களின் பாடசாலை உபகரணங்களைப் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கான தகவல் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் இன்றைய தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

குறைந்த வருமானம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்த குடும்பங்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் குடும்பத் தரவுகள் சேகரிக்கும் அரசாங்கம் | Govt To Collect Family Data Of Students

இதன் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க   தெரிவித்துள்ளார்.

 

 

Previous Story

முஸ்லிம்களுக்கு ஒரு அமைச்சும் இரு பிரதி அமைச்சும்!

Next Story

கைநழுவிய வரலாற்று வாய்ப்பு