மஹிந்த பதவி விலகுவதைத் தடுக்கின்ற கொள்ளைக் கூட்டம்! அது ஏன்!

சமகால அரசியல் நெருக்கடியில் யார் பதவி விலகுவது என்பது தொடர்பில் ராஜபக்சர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

நாளையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகிந்த பதவியில் இருந்து விலகி செல்வதை பாரிய மோசடிகளில் ஈடுபட்ட அவர்களின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போது, தான் பதவி விலகப் போவதில்லை என மகிந்த தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் பதவியில் இருந்து விலகினால், அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விலகியவுடன் அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தைப் போன்று தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழு மகிந்தவுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் போது உறுப்பினர் ஒருவர், பிரதமரிடம், நீங்கள் விலக மாட்டீர்கள் தானே என வினவியுள்ளார். அதற்குப் பதிலளித்த மகிந்த ‘இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

சேர் சென்றால், எண்ணெய் கிடைக்கும், எரிவாயு கிடைக்கும், டொலர் கிடைக்கும் என்றால் பதவி விலகுங்கள். அவ்வாறு நடக்காதே.. ஒன்று ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள். அவரை வீட்டிற்கு போக சொல்லுங்கள் என பெண் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“யாரையும் போகச் சொல்லவில்லை. எல்லோரும் வெளியேறுகிறார்கள், ”என்று மற்றொரு எம்.பி தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலையில் புதிய அரசாங்கம் ஒன்று உருவானால் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆட்சியில் இருந்து செல்ல பலர் அச்சப்படுகின்றனர்.

அவர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்சவும் தனது பதவியை கைவிட தயக்கம் காட்டுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous Story

5 பில்லியன் டொலர் தேடியுள்ளோம்! நாட்டை பொறுப்பேற்க தயார் - சஜித் அணி

Next Story

அன்னையர் தினத்தில் தாய்மார் நடுத் தெருவில்!