மலையத்தில்அனுர ஹீரோ!

நஜீப்

நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல்

கடந்த சில தினங்களுக்குமுன் போதை ஒழிப்பு கூட்டத்துக்கு நுவரெலிய சென்ற ஜனாதிபதி அனுர மலை முகடுகளில் ஏறி இறங்கினார். ஜனாதிபதி ஒருவர் இப்படி மலைகளில் நடமாடியது  வரலாறாகும்.

அங்கு கூடிய தொழிலாளர்கள் இதயசுத்தியுடன் ஜனாதிபதியை வாழ்த்தி வரவேற்றதுடன் அவருடன் நெருக்கமாக இருந்ததை ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

இந்த செய்திகள் இன்று மலையகத்திலும் அதற்கு வெளியிலும் வைரலாகி வருகின்றது. இதன் மூலம் அனுர ஒட்டுமொத்த மலையக மக்களின் இதயங்களிலும் புகுந்து விட்டார் என்பதுபோலத் தெரிகின்றது.

இதனால் பிரதான எதிரணி மட்டுமல்லாது அனைத்து மலையக அரசியல் கட்சிகளுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகின்றது.

மலையக மக்களின் சம்பளம் அதிகரிப்பின் போது சஜித் அணி நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு பெரும் பாதிப்பாகி இருக்கின்ற நேரம் தமது சம்பள அதிகரிப்புக்காக மொத்த மலையக சமூகமும் அனுராவுக்கு நன்றி தெரிவிக்கின்றது.

Previous Story

எச்சரிக்கை:அபேராம கூட்டம்!

Next Story

"ආයිත් කියලා අහුවුණොත් තෝ ඉවර කරනවා" | සිතුවමක් නිසා කොටු වූ බුද්ධි නිලධාරියා