மற்றுமோர் வடகொரியா உதயம்!

-யூசுப் என் யூனுஸ்-

Iran Warns of Decisive Response to US, Israeli Military Action | Farsnews Agency

உலக வரை படத்தில் மற்றுமோர் வடகொரியா உதயமாகி இருக்கின்றது. இதுவரை தனக்கு எதிராக இஸ்ரோல் மேற்கொண்ட தாக்குதல்களைச் சகித்துக் கொண்டு வந்த ஈரான், இப்போது அறிவுபூர்வமாக அதற்குப் பதில் கொடுத்திருக்கின்றது.

தனது இராணுவத் தலைவர்கள், விஞ்ஞானிகள் ஆயுத உற்பத்தி நிலையங்கள் என்று இன்னோரன பொருளாதார, இராணுவ மையங்களை இஸ்ரோல் தனது கையாட்களைப் பாவித்து அழித்து வந்த நிலையில் அதற்குப் பதில் கொடுக்காது தனது கவனத்தை தனது இராணுவ வல்லாதிக்கத்தை நிலை நாட்டுவதில் மட்டும் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்த ஈரான், இன்று அதன் இலக்கை எட்டிவிட்டது என்றுதான் தெரிகின்றது.

Iran's Military Capability 2022: Green Light - Iran Armed Forces 2022 - O Poderio Militar do Irã - YouTube

இது அதன் எதிரிகளுக்கு இப்போது பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வடகொரியாவின் பாணியில் கடந்த சில தினங்களாக ஈரான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஏவுகனைப் பரீசோதனைகள் குறிப்பாக ஒலியையும் விட 15 மடங்கு வேகம் கொண்ட சுப்பர் சோனிக் ‘பத்தா’ ஏவுகனை பரிசோதனையால் இஸ்ரேல் அதிர்ந்து போய் இருக்கின்றது.

Chilling warning as Iran 'develops terrifying hypersonic missile that can punch through ALL air defences', regime claims | The Irish Sun

தற்போது உலகில் ரஸ்யா, சீனா, வட கெரியா, ஈரான் என்ற இராணுவக் கூட்டணியொன்று உருவாகி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. மேற்சொன்ன வகையான சுப்பர் சோனிக் ஏவுகளைகள் ரஸ்யா, சீனா, வடகொரியாவிடம் மட்டுமே இதுவரை இருந்தது. அதுவும் ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டவை அவை.

நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சூடானில் 80 குழந்தைகள் பலி!

Next Story

புயல்: பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலுக்கு என்ன ஆனது தெரியுமா?