மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியது ஏன்..! 

சந்தேக நபர் நேற்று காலை கல்னேவ, ஹெலபதுகம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நபர் தொடர்பான பல உண்மைகளை கல்னேவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வாக்குமூலம்

அவர் சிறையில் இருந்து பிணையில் வந்ததாகவும், பணம் இல்லாததால் பொருட்களைத் திருடும் நோக்கத்துடன் மருத்துவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன் போது விடுதியில் பெண் மருத்துவர் மட்டுமே இருந்தது தனக்கு தெரியவந்ததாக ஒப்புக்கொண்டார்.

சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

விரிவான விசாரணை

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளில், சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியது ஏன்..! சந்தேகநபர் வாக்குமூலம் | Anuradhapura Case Details About Suspect

மேலும் அவர் நாட்டின் பிரபல குற்றவாளிகளின் பட்டியலில் பெயர் உள்ள ஒருவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் விரிவான விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Previous Story

நோன்பில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய உணவு முறை!

Next Story

பாகிஸ்தான் ரயில் கடத்தல்:  பயணிகளின் திகில் அனுபவம்!