மயோனுக்கு எதிரான தீர்ப்பு!

-நஜீப்-

பொன்சேக்கா 2010 ல் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டி போட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விமல் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அதற்காக 42 இலட்சம் ரூபாய்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா விமல் தரப்பினருக்கு கையளித்திருந்தார்.

அந்தப் பணத்தை வாங்கி கொண்டு அதனை வீடியோப் பதிவு செய்து கொண்டவர்கள் மயோனின் இந்த நடவடிக்கைகளை ஊடகச் சந்திப்பில் அன்று அம்பலப் படுத்தியும் இருந்தனர். இது தொடர்பான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு குற்றம் தெளிவாக உறுதி செய்யப்பட்டதால் லஞ்சக் குற்றச்சாட்டில் மயோன் குற்றவாளி என்று நீதி மன்றம் அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கி இருக்கின்றது.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இந்தப் பணக் கொடுக்கல் வாங்களில் பிரதான பங்காளியாக இருந்து பணத்தை மயோனுக்குக் கொடுத்தவரும் அவரை வண்டியில் கொண்டு போய் அங்கு இறக்கி விட்டவர் என்று சொல்லப்படும்  மு.கா. நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நசீர் அஹமட் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது இலங்கை நீதித்துறையில் பெரும் வேடிக்கையாக பார்க்கப்படுகின்றது. இதுதான் அதிகார அரசியல் போலும்.!

நன்றி: 05.03.2023 ஞாயிறு தினக்குரல்

 

 

 

 

 

Previous Story

ஹீரோவும் வில்லனும் வம்பனும் ஒருவனே!

Next Story

உறங்கும் வடக்கு கிழக்கு!