நஜீப்
05.10.2025 நன்றி ஞாயிறு தினக்குரல்
சொந்த மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தலைக்கு மேல் இருக்க அதனைப்புறம் தள்ளிவிட்டு அங்குனுகொலபெலஸ்ஸ-தளாவ வட்டாரத்தில் மொட்டுக் கட்சியில் போட்டியிடும் சமன் மனம்பேரிக்காக முன்னாள் அமைச்சர் ஜொனி முழு நேரத்தையும் ஒதுக்கி செயல்பட்டார்.

அவர் நல்லவர் தாராளமாக காசு அள்ளிவீசி செலவு செய்யக் கூடிய ஒரு நல்ல மனிதர் என்று அவர் சான்றிதழ் கொடுத்திருந்தார்.
சம்பத் மனம்பேரி இந்தக் குற்றச்சாட்டில் சிக்கிக் கொள்ள சில நாட்களுக்கு முன்னர் ஒரு புதிய வீட்டுக்கும் மாறி இருக்கின்றார்.
அந்த நிகழ்விலும் ஜொனி கலந்து கொண்டு அப்போது மனம்பேரிக்கு ஒரு புதிய காரையும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் அன்பளித்திருக்கின்றார்.

எனவே இந்த இவருக்கும் போதை வியாபாரத்துக்கும் என்ன தொடர்புகள் இருந்திருக்க முடியும் என்பதனை அடுத்து வருகின்ற விசாரணைகளில் நாட்டு மக்களுக்குத் தெரியவரும்.
தகவல்கள் அம்பலமாகும் அதே நேரம் குழப்பியடிக்கின்ற கதைகளும் இறக்கிவிடப்பட்டு வருகின்றன.





