மன்னிப்புக் கேட்டார் சஜீத்!

நஜீப்

நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல்

எதிர்க் கட்சித்தலைவர் சஜிதிடம் நல்ல பல பண்புகள் இருப்பதை நாம் அறிவோம்.

அண்மையில் கண்டி மாநகரசபையில் தனது உறுப்பினர்கள் பேரழிவுக்கு உதவ அங்கு போய் இருந்த சோமே என்ற இளவயது சமூக செயல்பாட்டாளர் தரப்பினருடன் நடந்து கொண்ட ஒழுங்கை சஜித் வன்மையாகக் கண்டிக்கின்றார். அத்துடன் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதாகவும் சம்பவத்துக்கு தான் மன்னிப்புக் கேட்பதாகவும் கூறினார்.

அவரது இந்த செயல்பாட்டை பாராட்ட வேண்டும். அதே போன்று கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மற்றுமொரு கூட்டத்தில் ஆளும் தரப்பு இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமை ஆசனத்தில் அமர்ந்திருந்ததை தாங்கிக்கொள்ளாத திலித் சுஜீவ மனோ சுமந்திரன் போன்றவர்கள் கேள்வி எழுப்பி, இவர் யார்? அவரை எமக்குத் தெரியாது என்று  வம்பு பண்ணி இருக்கின்றார்கள்.

கடந்த ஒரு வருடமாக இவர்கள் அவருடன்தான் நாடாளுமன்றில் ஒன்றாக இருக்கின்றார்கள்.!

Previous Story

ඔබේ මුදල් අකුරට වැඩ

Next Story

මේ ඇත්තලා ආගිය අතක් නැත කරැනාකර සොයා දෙන්න