நஜீப்
நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல்
தற்செயலாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அது செல்வாக்கான கல்கந்த தம்மானந்த தேரருடனானது. மனித நேயம் காரணமாக கடும்போக்கு பௌத்தர்கள் தன்னுடன் கோபத்தில் இருப்பதாக தேரர் கூறுகின்றார்.
சிறுபான்மை சமூக நலன்களுக்கு தொடர்ச்சியாக பேசுவதால் அவரது தாயை ஒரு தமிழச்சி என அவரது எதிரிகள் சொல்லி வருகின்றார். அது அப்பட்டமான பொய். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர் குரல் கொடுப்பதால் அவருக்கு அப்படி ஒரு நெருக்குதல்.
இவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவரல்ல. காலிமுகத்திடல் நிகழ்வே இந்த அரசு அமைய அடித்தளமிட்டது என்பது தேரர் கருத்து.
நமது சமூகக் காயங்கள் நமக்குப் பெற்றோர்களிடத்திலிருந்து கிடைத்தவை. அவர்களுக்கு அதனைக் கொடுத்தது அவர்களின் மூதாதயர்.
நமது இளசுகளின் தலைகளில் இது போய்விடாது. இந்தக் காயங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நாம் அனைவரும் மனிதர்களே இது தேரர் கோசம்.




