பொருளாதார நெருக்கடி: கியூவில் முதல் மரணம் பதிவு.

(தகவல்:சாபி சிஹாப்தீன்)

நேற்று கொழும்பில் மண்ணெண்ணை வாங்கப் போன இடத்தில் கியூவில் ஒரு தாய் மயங்கி விழுந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பான  செய்தியாக இடம் பிடித்திருந்தது.

இன்று அப்படிக் கியூவில் நின்றிருந்த ஒருவர் மயங்கி விழுந்து மரணத்தையே தழுவி இருக்கின்றார். இந்த செய்தி நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துக்கின்ற செய்தியாக அமைய இடமிருக்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் தெருக்களில் மரணிக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. இந்த மரணம் பற்றிய மேலதிக தகவல்களை இப்போது பார்ப்போம்.

உடதலவின்னை என்ற கிராமத்தில் இருந்து எட்டுக் கிலோ மீற்றர்கள் வரை தொலைவில் அமைந்துள்ள கண்டி நகருக்கு சமயல் எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக எம்.எச்.எம். இல்யாஸ் என்பவர் வீட்டுத் தேவைக்காக மண்ணெண்ணை வாங்குவதற்காக வசு வண்டியில் கண்டி-மாவட்டச் செயலகத்திற்கு (கச்சேரிக்கு) முன்னால் அமைந்திருக்கின்ற எரி பொருள் நிரப்பும் நிலையத்துக்குப் போய் இருக்கின்றார்.

அவர் அங்கு கியூவில் நின்றிருந்த போது  மயங்கி விழுந்திருக்கின்றார். அவரை பக்கத்தில் இருந்தவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் ஆளைக் காப்பாற்ற முடியவில்லை அவர் மரணித்து விட்டார்.

தற்போது அவரது உடல் கண்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்படடிருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டிருருக்கின்ற பொருளாதரா நெருக்கடியில் நாம் அறிந்த வரை கியூவில் நிற்கும் போது நிகழ்ந்த முதல் மரணமாக இது வரலாற்றில் பதிவாகின்றது எனக் கருதுகின்றோம்.

மரணித்தவர் முன்னாள் பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றிய ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? - அறிவியல் கூறும் காரணங்கள்

Next Story

அமெரிக்கா - சீனா அதிபர்கள் பேச்சு